சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலப்பட டீ துாள்; 2 கடைக்கு நோட்டீஸ்

Added : அக் 08, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவி, விஜயராஜா, பாலமுருகன் ஆகியோர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பகுதியில், 16 டீ கடைகள் மற்றும் பேக்கரிகளில் ஆய்வு நடத்தினர்.இது குறித்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:கலப்பட டீ துாள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், 2 பேக்கரிகள் சிக்கியுள்ளன. டீ
 கலப்பட டீ துாள்; 2 கடைக்கு நோட்டீஸ்

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவி, விஜயராஜா, பாலமுருகன் ஆகியோர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பகுதியில், 16 டீ கடைகள் மற்றும் பேக்கரிகளில் ஆய்வு நடத்தினர்.இது குறித்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:கலப்பட டீ துாள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், 2 பேக்கரிகள் சிக்கியுள்ளன. டீ துாள் பறிமுதல் செய்யப்பட்டு, பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு அடிப்படையில், கலப்பட டீ துாள் பயன்படுத்தியவர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும்.கலப்பட டீ துாள் விற்பனை செய்பவர் யார் எனவும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. தொடர்ந்து பேக்கரிகளில் நடத்திய ஆய்வில், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடாத கார வகைகள், 10 கிலோ; சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 6 கிலோ இனிப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X