பொது செய்தி

தமிழ்நாடு

காரணம்பேட்டை மீது தனிக்கவனம்: இளைஞர் அமைப்பு வேண்டுகோள்

Added : அக் 08, 2021
Share
Advertisement
பல்லடம்;விபத்துகளை தடுக்க, காரணம்பேட்டை மீது கவனம் செலுத்த வேண்டும் என, இளைஞர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.காரணம்பேட்டை 'இணைக்கும் கரங்கள்' இளைஞர் அமைப்பினர், கலெக்டர் மற்றும் பல்லடம் டி.எஸ்.பி., ஆகியோருக்கு அனுப்பிய மனு:கோவை -- திருச்சி ரோடு, காரணம்பேட்டை பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இருப்பினும், விபத்து தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் இதுவரை

பல்லடம்;விபத்துகளை தடுக்க, காரணம்பேட்டை மீது கவனம் செலுத்த வேண்டும் என, இளைஞர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.காரணம்பேட்டை 'இணைக்கும் கரங்கள்' இளைஞர் அமைப்பினர், கலெக்டர் மற்றும் பல்லடம் டி.எஸ்.பி., ஆகியோருக்கு அனுப்பிய மனு:கோவை -- திருச்சி ரோடு, காரணம்பேட்டை பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இருப்பினும், விபத்து தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. ரோட்டை கடக்க நினைக்கும் பொதுமக்கள் பலர் விபத்தில் சிக்குகின்றனர்.காரணம்பேட்டை -- சங்கோதிபாளையம் சந்திப்பில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் இணைகின்றன. இப்பகுதியில், விபத்துகளை தடுக்கும் வகையில் எச்சரிக்கை விளக்கு அமைக்க வேண்டும்.காரணம்பேட்டை சிக்னலில், வாகன ஓட்டிகள் பலர் சாலை விதிகளை பின்பற்றாமல் செல்வதாலும், அடிக்கடிவிபத்துகள் ஏற்படுகின்றன. சிக்னலில் போக்குவரத்து போலீசாரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும். நால்ரோடு சிக்னலில், ரோடு மிகவும் சேதமடைந்துள்ளது.எனவே, விபத்துகளை தடுக்க இந்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X