பொது செய்தி

தமிழ்நாடு

'பிட் இந்தியா' விழிப்புணர்வு சைக்கிளில் பிரசாரம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
வெள்ளகோவில்:வெள்ளகோவிலில் மத்திய அரசின் 'பிட் இந்தியா' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெள்ளகோவில் அரசு சுகாதார நிலையம் முன் நேற்று முன்தினம் காலை சைக்கிள் பேரணி நடந்தது.அரசு சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி கொடியசைத்து ,துவக்கி வைத்து பேசினார்.அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து புறப்பட்டு செங்காளி பாளையம், காட்டுப்பாளையம்,
 'பிட் இந்தியா' விழிப்புணர்வு சைக்கிளில் பிரசாரம்

வெள்ளகோவில்:வெள்ளகோவிலில் மத்திய அரசின் 'பிட் இந்தியா' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெள்ளகோவில் அரசு சுகாதார நிலையம் முன் நேற்று முன்தினம் காலை சைக்கிள் பேரணி நடந்தது.அரசு சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி கொடியசைத்து ,துவக்கி வைத்து பேசினார்.அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து புறப்பட்டு செங்காளி பாளையம், காட்டுப்பாளையம், காடையூரான் வலசு வரை சென்று, திரும்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை 15 கிலோமீட்டர் துாரம் சைக்கிள் பேரணி நடந்தது.சைக்கிள் பேரணிக்கு அரசு சுகாதார நிலையம், வெள்ளகோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளையினர், நிழல்கள் அறக்கட்டளை, உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் கதிரவன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X