அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: உண்மையே உன் விலை என்ன?

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021 | கருத்துகள் (64)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:அ.கணேசன், பேட்டை, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு செலவிட்ட கணக்குகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளன. விளம்பரங்கள், நட்சத்திரப் பேச்சாளர்களின் பயணச் செலவு மற்றும்
TN Election, Prashant Kishor, MK Stalin


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


அ.கணேசன், பேட்டை, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு செலவிட்ட கணக்குகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளன. விளம்பரங்கள், நட்சத்திரப் பேச்சாளர்களின் பயணச் செலவு மற்றும் வேட்பாளர்களுக்கு கொடுத்தது ஆகியவை அடங்கலாக, தி.மு.க., 114.14 கோடி ரூபாயும், அ.தி.மு.க., 57.33 கோடி ரூபாயும் மட்டுமே செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsதி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுத்த பிரசாந்த் கிஷோருக்கே, 380 கோடி ரூபாய் தட்சணை கொடுத்தனர். இதை எந்த கணக்கில் சேர்ந்துள்ளனர் என்பது தெரியவில்லை. 'பொய் சொல்லும் வாய்க்கு, போஜனம் கிடைக்காது' என்று ஒரு சொலவடை உண்டு. ஆனால் அரசியல்வாதிகள் மூன்று வேளையும் மூக்கு முட்ட, வயிறு கொள்ளாத அளவுக்கு சாப்பிடுகின்றனர். அவர்கள் யாரும் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவதாக தெரியவில்லை. இவர்களுக்கு ஓட்டுப் போட்டு ஆட்சியில் அமர வைத்த வாக்காளர்கள் தான் சரியான, நிலையான வருமானம் இன்றி சாப்பாட்டுக்கு கஷ்டப்படுகின்றனர்.

அரசியல் கட்சிகள் சொல்வது அனைத்தும் பொய் என, தேர்தல் ஆணையத்துக்கும் நன்றாகவே தெரியும். பின் எதற்காக இந்த போலியான செலவு கணக்கு சமர்ப்பிக்கும் சடங்கும், சம்பிரதாயமும்? உண்மையே உன் விலை தான் என்ன?

Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
08-அக்-202121:51:37 IST Report Abuse
Tamilnesan இந்தியாவில் உள்ள அரசியல் அமைப்பு சட்டத்தின் பாதுகாவலர்கள் உச்சா நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் இவைகளை கை கட்டி வேடிக்கை பார்ப்பதன் மர்மம் என்ன ?
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
08-அக்-202116:59:59 IST Report Abuse
vbs manian modi ivar vendaam intha oppidal. mamaikkum maduvukkum ulla vitthiyaasam. மக்கள் சிரிப்பார்கள்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
08-அக்-202116:49:44 IST Report Abuse
DVRR முன்னாடி தமிழில் இருந்த பழமொழி ???உனக்கு படிப்பு ஏறவில்லையா நீ கழுதை மேய்க்கத்தான் லாயக்கு என்பார்கள் . இப்போது அது புது மொழியாக ???நீ படிப்பிலே தண்டமா அப்போ நீ அரசியல்வாதி ஆகத்தான் லாயக்கு ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X