இந்தியா

அஜித் பவார் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
மும்பை :மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் குடும்பத்தினருக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசிய வாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சர்க்கரை ஆலை கடந்த 2010ல் சதாரா மாவட்டத்தில் உள்ள ஜரந்தேஸ்வர் சர்க்கரை ஆலையை, மாநில கூட்டுறவு
அஜித் பவார் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

மும்பை :மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் குடும்பத்தினருக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசிய வாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.


சர்க்கரை ஆலை


கடந்த 2010ல் சதாரா மாவட்டத்தில் உள்ள ஜரந்தேஸ்வர் சர்க்கரை ஆலையை, மாநில கூட்டுறவு வங்கி குறைந்த விலையில் ஏலத்தில் விட்டது. அந்த நேரத்தில் கூட்டுறவு வங்கியின் இயக்குனர்கள் வாரியத்தில் பிரதான உறுப்பினராக தற்போதைய துணை முதல்வரான அஜித் பவார் இருந்தார்.அந்த ஆலையை வாங்க உபயோகிக்கப்பட்ட நிதிகளில் பெரும்பாலான தொகை அஜித் பவாருக்கு சொந்தமான, 'ஸ்பார்க்லிங் சாயில் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது. இந்த ஆலையை வைத்து வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.


latest tamil newsஇது தொடர்பாக விசாரித்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சமீபத்தில் 65.75 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த சர்க்கரை ஆலையை முடக்கினர்.
இந்நிலையில் வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் அஜித் பவாரின் சகோதரிகள் உள்ளிட்ட சில குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.


சோதனைஇதனுடன் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சிலவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது.இந்த சோதனைகளில் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


எந்த பிரச்னையும் இல்லை!எனக்கு தொடர்புடைய நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி உள்ளதால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. அனைத்து நிறுவனங்களும் முறையாக வரி செலுத்தி வருகின்றன. என் சகோதரிகளை இந்த விவகாரத்தில் இழுப்பது கவலை அளிக்கிறது.
அஜித் பவார் மஹா., துணை முதல்வர், தேசியவாத காங்.,

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
08-அக்-202112:29:25 IST Report Abuse
duruvasar ஐயோ கொல்லாங்கரளே கொல்லாரங்களே படம் எவ்வளவு தடவை ரீலீஸ் செய்தாலும் வசூலில் கல்லா கட்டும். சூப்பர் ஹிட் படம். அதனால்தான் எல்லா மொழிகளிலும் 'டப்' செய்யப்பட்டுள்ளது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
08-அக்-202112:21:25 IST Report Abuse
Ramesh Sargam இந்தியாவில் உள்ள 99 சதவிகித அரசியல்வாதிகள் ஊழல் பேர்வழிகள். எல்லோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் இதுபோன்று சோதனை செய்து, அங்கு அவர்கள் தகாத முறையில் சேர்த்த பணம், நகை மற்றும் பல சொத்துக்களையும் பறித்து, மக்கள்நல பணிகளுக்கு பயன் படுத்த வேண்டும். கோடியில் இது போன்று ஒருவரின் வீட்டில் சோதனை செய்வதால் எந்த பலனும் இல்லை.
Rate this:
CHARUMATHI - KERALA,இந்தியா
08-அக்-202113:09:56 IST Report Abuse
CHARUMATHIஅதெல்லாம் நாங்க மாட்டோம் கோவில் நகைகள் மட்டும் தான் பறித்து உருக்கி கொள்ளை அடிப்போம்...
Rate this:
Cancel
Nagar - Dukhan ,கத்தார்
08-அக்-202109:42:16 IST Report Abuse
Nagar பவார் குடும்பத்தில் சரத் பவார், மற்றும் அவனது பெண், அஜித் பவார் மூவரும் கைது செய்யப்படவேண்டும். தாவூத் இப்ராஹிம் இடமிருந்து என்பது கோடி லஞ்சம் வாங்கி சரத் பவார் மும்பை வெடிகுண்டு சம்பவம் ஏற்பட உதவி செய்தான்.மஹாராஷ்டிராவில் பாசனத்துறை மந்திரி யாக இருந்தபோது அஜித் பவார் தொண்ணூறுஆயிரம் கோடி ஊழல் செய்து மஹாராஷ்டிராவில் விவசாயம் சீரழித்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X