பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர் சேர்க்கை விரைவில் துவக்கம்: மருத்துவ கல்லூரி கட்டுமானப்பணி வேகம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
திருப்பூர்:!நீட்' தேர்வு முடிவுக்கு பின் மருத்துவ மாணவர் சேர்க்கை துவங்க உள்ளதால், இம்மாத இறுதிக்குள் மருத்துவ கல்லுாரி வகுப்பறை திறக்க தேவையான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகிறது.திருப்பூர் தாராபுரம் ரோட்டில், 336 கோடி ரூபாயில் அரசு மருத்துவ கல்லுாரி கட்டுமான பணி மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது. மத்திய குழு ஆய்வுக்கு பின், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல்
 மாணவர் சேர்க்கை விரைவில் துவக்கம்: மருத்துவ கல்லூரி கட்டுமானப்பணி வேகம்

திருப்பூர்:!நீட்' தேர்வு முடிவுக்கு பின் மருத்துவ மாணவர் சேர்க்கை துவங்க உள்ளதால், இம்மாத இறுதிக்குள் மருத்துவ கல்லுாரி வகுப்பறை திறக்க தேவையான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகிறது.திருப்பூர் தாராபுரம் ரோட்டில், 336 கோடி ரூபாயில் அரசு மருத்துவ கல்லுாரி கட்டுமான பணி மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது. மத்திய குழு ஆய்வுக்கு பின், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால், 'நீட'் தேர்வு முடிவு வெளிவந்த சில நாட்களில், அட்மிஷன் துவங்க உள்ளது.கட்டுமான பணி காரணமாக மருத்துவமனையின் ஒவ்வொரு வார்டு, ஒவ்வொரு இடத்தில் செயல்படுகிறது. பிரசவம், பொதுமருத்துவம், குழந்தைகள் நலம் மட்டும் ஒருங்கிணைந்த தளத்தில் உள்ளது. இச்சூழலில் பணி முடியும் முன்பாக, மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால், வகுப்புகளை எங்கு நடத்துவது என்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.இதனால், முழு மருத்துவ கல்லுாரி பணிகளை ஒரே நேரத்தில் முடித்து, திறப்பு விழா ஏற்பாடு செய்யாமல், மாணவர்களுக்கான வகுப்பறை பணிகளை மட்டும் விரைந்து முடித்து, அக்., இறுதிக்குள் திறக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மருத்துவ கல்லுாரிகளிலும் மாணவர் சேர்க்கை முடிந்து, வகுப்புகள் துவங்கும் நேரத்தில் திருப்பூரிலும் வகுப்பு துவங்க வேண்டும் என அரசு தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால், மருத்துவ கல்லுாரி கட்டுமான பணிகள் திடீரென வேகமெடுத்துள்ளது. மருத்துவ கல்லுாரி முகப்பு கட்டடம், நுழைவு வாயில் பகுதியில் பெயிண்ட் அடிக்கும் பணிகள் நேற்று துவங்கின. இப்பணி இம்மாத இறுதிக்குள் முடிக்கப்பட உள்ளது.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,' அட்மின் கட்டடம், கல்லுாரி வகுப்பறை, விடுதி, குடியிருப்பு என நான்காக பிரித்து கட்டுமான பணி நடக்கிறது. வகுப்புக்கான பணி, 60 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. ஒன்றரை மாதத்துக்குள் மாணவர் அமர்ந்து படிக்க தேவையான வசதி ஏற்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அதற்கேற்ப பணியை வேகப்படுத்தியுள்ளோம்,' என்றனர்.கூடுதல் 'சீட்' கேட்டிக்கோம்...திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி 'டீன்' முருகேசன் கூறியதாவது:'நீட்' தேர்வு முடிவு வெளிவந்தவுடன் பொது சுகாதாரத்துறை இயக்குனரகத்தின் ஒப்புதல் பெற்று உடனே அட்மிஷன் துவங்கும். நுாறு மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது; கூடுதலாக, 50 மாணவர் சேர்த்து, 150 மருத்துவ மாணவர்களை உருவாக்க முடியும்; அதற்கேற்ப ஒப்புதல் வழங்க வேண்டும் என தமிழக அரசின் மூலம் கேட்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லுாரியில் முதல்கட்டமாக வகுப்பு துவங்க தேவையான பணி மும்முரமாக நடந்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X