பல ஆண்டு போராட்டம் வெற்றி பெற்றதால்...மதுக்கடை அகற்றம்; மக்கள் கொண்டாட்டம்: முன்னரே வந்த தீபாவளி| Dinamalar

தமிழ்நாடு

பல ஆண்டு போராட்டம் வெற்றி பெற்றதால்...மதுக்கடை அகற்றம்; மக்கள் கொண்டாட்டம்: முன்னரே வந்த 'தீபாவளி'

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021 | கருத்துகள் (2)
Share
மகிழ்ச்சியாக உள்ளதுசிக்கண்ணா கல்லுாரி சென்று திரும்பும் போது, 'குடி'மகன்கள் இந்த வீதியில் அலங்கோலமாக விழுந்து கிடப்பர். சில விஷமிகள் பெண்களை கிண்டல் செய்வதும், ஆபாசமாக பேசுவதும் வழக்கமாக இருந்தது. தற்போது மதுக்கடை அகற்றப்பட்டது, பெண்களுக்கு குறிப்பாக, என் போன்றவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.- குணசுந்தரி, கல்லுாரி மாணவி.பெரும் நிம்மதிதெரு முனையில்
  பல ஆண்டு போராட்டம் வெற்றி பெற்றதால்...மதுக்கடை அகற்றம்; மக்கள் கொண்டாட்டம்: முன்னரே வந்த 'தீபாவளி'

மகிழ்ச்சியாக உள்ளது
சிக்கண்ணா கல்லுாரி சென்று திரும்பும் போது, 'குடி'மகன்கள் இந்த வீதியில் அலங்கோலமாக விழுந்து கிடப்பர். சில விஷமிகள் பெண்களை கிண்டல் செய்வதும், ஆபாசமாக பேசுவதும் வழக்கமாக இருந்தது. தற்போது மதுக்கடை அகற்றப்பட்டது, பெண்களுக்கு குறிப்பாக, என் போன்றவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.- குணசுந்தரி, கல்லுாரி மாணவி.பெரும் நிம்மதிதெரு முனையில் உள்ள மதுக்கடை வாசலில் கும்பல் கும்பலாக மது அருந்தும் ஆசாமிகள் நிற்பது வழக்கம். பெண்கள், குழந்தைகள் யாரும் அந்த வழியில் நடந்து செல்லக் கூட முடியாத நிலை. தினமும் இந்த துன்பத்தை அனுபவிக்கும் நிலை இருந்தது. மதுக்கடைக்கு மூடு விழா நடத்தியது எங்ககள் பகுதி மக்களுக்கு பெரும் நிம்மதியாக உள்ளது.- பிரியா, பனியன் நிறுவன ஊழியர்.
வேண்டி கொண்டோம்
கொங்கணகிரி பகுதி வீதிகள் வழியாக வடக்கு பகுதிக்கு செல்லும் ரோடு உள்ளது. பெரும்பாலான மது அருந்தும் நபர்கள் இந்த வழியாக தான் வாகனங்களில் செல்வது வழக்கம். குடியிருப்பு பகுதிக்குள் மது போதையில் வாகனங்களை ஓட்டி செல்வர். ஒவ்வொரு நாளும் விபத்தில்லாமல் கழிய வேண்டும் என வேண்டி கொள்வோம். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டது. நடவடிக்கை எடுத்த அனைவருக்கும் நன்றி.- விஜயகுமார், 40. பனியன் டெய்லர்.
ஒட்டுமொத்த தீர்வு
மதுக்கடை உள்ள தெருவை சுற்றிலும் குடிமகன்கள் அசிங்கப்படுத்துவது; ரோட்டில் போதையில் விழுந்து கிடப்பது என்பது வாடிக்கையாகவே இருந்து வந்தது. சமீபத்தில் இங்குள்ள சாக்கடையில் விழுந்து இறந்து கிடந்தார். குறுக்கு வீதிகளிலும் போக்குவரத்து பிரச்னையும் இருந்தது. மதுக்கடை அகற்றப்பட்டதால், இவற்றுக்கு ஒட்டு மொத்தமாக தீர்வு கிடைத்துள்ளது.- கருப்பசாமி, பனியன் தொழிலாளி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X