பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுத பூஜை, தீபாவளி விடுமுறை: கோவை - சென்னைக்கு சிறப்பு ரயில்

Added : அக் 08, 2021
Share
Advertisement
திருப்பூர்:'ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு, கோவை - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது,' என, சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க வரும், 13 மற்றும் நவ., 3ம் தேதியில், சென்னையில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மூன்று 'ஏசி', எட்டு படுக்கை வசதி, நான்கு முன்பதிவு உள்ளிட்ட, 17 பெட்டிகள் கொண்டதாக இந்த ரயில்

திருப்பூர்:'ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு, கோவை - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது,' என, சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க வரும், 13 மற்றும் நவ., 3ம் தேதியில், சென்னையில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மூன்று 'ஏசி', எட்டு படுக்கை வசதி, நான்கு முன்பதிவு உள்ளிட்ட, 17 பெட்டிகள் கொண்டதாக இந்த ரயில் இயக்கப்படுகிறது.வரும், 17 மற்றும் நவ., 7ம் தேதி மறுமார்க்கமாக கோவையில் இருந்து சென்னைக்கு ரயில் இயங்குகிறது. திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி ஸ்டேஷனில் இந்த ரயில் நின்று செல்லும். சென்னையில் இருந்து இரவு, 11:30 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை, 7:30 மணிக்கு கோவை சென்று சேரும். கோவையில் இருந்து இரவு, 11:30 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை, 7:20 மணிக்கு சென்னை சென்று சேரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X