சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 ஆம்னி பஸ்கள் பறிமுதல்: வரி செலுத்தாததால் அதிரடி

Added : அக் 08, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஆம்னி பஸ்கள் தமிழகத்துக்கு உரிய வரி செலுத்தாமல் இயங்குவது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு நடத்த போக்குவரத்து துறை கமிஷனர் மற்றும் இணை கமிஷனர்கள் உத்தரவிட்டனர்.இதனால், நேற்று முன்தினம் இரவு கணியூர் சுங்கச் சாவடி பகுதியில் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சித்ரா, வேலுமணி,
 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல்: வரி செலுத்தாததால் அதிரடி

திருப்பூர்:ஆம்னி பஸ்கள் தமிழகத்துக்கு உரிய வரி செலுத்தாமல் இயங்குவது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு நடத்த போக்குவரத்து துறை கமிஷனர் மற்றும் இணை கமிஷனர்கள் உத்தரவிட்டனர்.இதனால், நேற்று முன்தினம் இரவு கணியூர் சுங்கச் சாவடி பகுதியில் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சித்ரா, வேலுமணி, பாலசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய குழு சோதனை மேற்கொண்டது.இதில், ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த இரு பஸ்கள் உட்பட மூன்று ஆம்னி பஸ்கள் தமிழகத்துக்கு உரிய வரி செலுத்தாமல் இயங்கியது தெரிந்தது. மூன்று பஸ்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் நிறுவனங்களிடம் மொத்தம், 1.08 லட்சம் ரூபாய் வரி மற்றும் 33 ஆயிரம் ரூபாய் அபராத கட்டணம் வசூலிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X