சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரம் வெட்டி சாய்ப்பு: அபராதம் விதிக்க பரிந்துரை

Added : அக் 08, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில்,மரத்தை வெட்டியவருக்கு, வருவாய் துறையினர் அபராதம் விதிக்க பரிந்துரைத்தனர்.திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு, அண்ணா காலனி அருகே, தனியார் ஒருவர் வீட்டின்முன் இருந்த, 15 ஆண்டு கால வேப்ப மரத்தை நேற்று, அடியோடு வெட்டி சாய்த்து விட்டனர். வடக்கு தாசில்தார் ஜெகநாதன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், விசாரணை நடத்தியதில், மரம் வெட்டியவர் ஷெரீப் என்பது

திருப்பூர்:திருப்பூரில்,மரத்தை வெட்டியவருக்கு, வருவாய் துறையினர் அபராதம் விதிக்க பரிந்துரைத்தனர்.திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு, அண்ணா காலனி அருகே, தனியார் ஒருவர் வீட்டின்முன் இருந்த, 15 ஆண்டு கால வேப்ப மரத்தை நேற்று, அடியோடு வெட்டி சாய்த்து விட்டனர். வடக்கு தாசில்தார் ஜெகநாதன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், விசாரணை நடத்தியதில், மரம் வெட்டியவர் ஷெரீப் என்பது தெரியவந்தது.அவரிடமிருந்து, ஒரு டன் எடையுள்ள மரம் பறிமுதல் செய்யப்பட்டது; இதன்மதிப்பு, 3 ஆயிரம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. மரத்தின் மதிப்பிலிருந்து இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிக தொகை அபராதம் விதிக்க, ஆர்.டி.ஓ.வுக்கு பரிந்துரைத்துள்ளனர்.இதேபோல், மேலப்பாளையத்தில், தனியார் ஒருவர் குழி தோண்டியபோது வேப்பமரம் சாய்ந்துள்ளது. இம்மரத்தை மறு நடவு செய்து பராமரிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X