சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி: புகையிலை பொருள் :4 பேர் கைது

Added : அக் 08, 2021
Share
Advertisement
பெருமாநல்லுார் போலீசார் நேற்று மளிகை் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர். அதில், புதிய திருப்பூர் பகுதியில், வனிதா ராஜ் மளிகை கடை, கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள மணிகண்டன் மளிகை கடை, தட்டாங்குட்டை நாகராஜ் மளிகை கடை மற்றும் சசிகுமார் மளிகை கடை, ஆகியவற்றில் புகையிலை பொருள் விற்றது தெரிந்தது. நான்கு பேரை கைது செய்த போலீசார், 135
 போலீஸ் டைரி: புகையிலை பொருள் :4 பேர் கைது

பெருமாநல்லுார் போலீசார் நேற்று மளிகை் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர். அதில், புதிய திருப்பூர் பகுதியில், வனிதா ராஜ் மளிகை கடை, கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள மணிகண்டன் மளிகை கடை, தட்டாங்குட்டை நாகராஜ் மளிகை கடை மற்றும் சசிகுமார் மளிகை கடை, ஆகியவற்றில் புகையிலை பொருள் விற்றது தெரிந்தது. நான்கு பேரை கைது செய்த போலீசார், 135 பாக்கெட் புகையிலை பொருளை பறிமுதல் செய்தனர்.
மண்டை உடைப்பு:வாலிபர் கைது
வெள்ளகோவில், சத்யா நகரை சேர்ந்தவர் சாமுவேல், 39. இவரும், காங்கயத்தை சேர்ந்த ரேணுகாவும் கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தனர். கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பெற்றோர் வீட்டுக்கு ரேணுகா வந்தார். விவகாரத்து கேட்டு, வழக்கு நடந்து வருகிறது. இச்சூழலில், ரேணுகாவின் வீட்டுக்கு சென்ற சாமுவேல், மனைவியை அனுப்பி வைக்குமாறு கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில், ரேணுகாவின் தம்பி லோகநாதன், சாமுவேலுவை தாக்கினார். காயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். காங்கயம் போலீசார் லோகநாதனை கைது செய்தனர்.
விபத்தில் தொழிலாளி பலி
அவிநாசியை சேர்ந்தவர் சங்கர், 33; கட்டட தொழிலாளி. இவரின் நண்பர் பார்த்திபன், 28. நேற்று மதியம், வஞ்சிபாளையத்தில் இருந்து அவிநாசி நோக்கி இருவரும் டூவீலரில் சென்றனர். ஒரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றதில், எதிரே வந்த கார், டூவீலர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்து சங்கர் அதே இடத்தில் இறந்தார். பார்த்திபன், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆயில் மில்லில் தீ விபத்து
காங்கயம், கடையூரை சேர்ந்தவர் சபரி, 45. அப்பகுதியில் தேங்காய் எண்ணெய் மில் நடத்தி வருகிறார். நேற்று மாலை, மில்லில், தேங்காய் பருப்பு சூடுபடுத்தும் கலனில், தீ பிடித்து எரிந்தது. காங்கயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், தேங்காய் பருப்பு, மெஷின் என, பல லட்சம் ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X