பொது செய்தி

தமிழ்நாடு

இன்று முதல் உற்பத்தி நிறுத்தம்; ஜவுளி உற்பத்தியாளர் அறிவிப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்துக்கு, அதன் தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். செயலாளர் சண்முகம், ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். இன்று முதல் உற்பத்தி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டது.இது குறித்து நிர்வாகிகள் கூறியதாவது:நுால் விலை உயர்வு, துணி விலை வீழ்ச்சி, தேக்கம், மற்றும்

பல்லடம்:பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்துக்கு, அதன் தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். செயலாளர் சண்முகம், ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். இன்று முதல் உற்பத்தி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டது.இது குறித்து நிர்வாகிகள் கூறியதாவது:நுால் விலை உயர்வு, துணி விலை வீழ்ச்சி, தேக்கம், மற்றும் விசைத்தறியாளர்களின் நெசவு கட்டணம் உள்ளிட்டவற்றால், ஜவுளி உற்பத்தி தொழில் நெருக்கடியில் உள்ளது. கடந்த ஆண்டு கிலோ, 120 ரூபாயாக இருந்த '20 வெப்ட்' நுால் விலை தற்போது, 140ஆக உயர்ந்துள்ளது.துணிகளை ஏற்றுமதி செய்வதற்கான கன்டெய்னர்கள் கிடைக்க, குறைந்தது, 25 நாட்கள் ஆகின்றன. போக்குவரத்து செலவு, கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த இடையூறுகளால், வியாபாரிகள் துணி வாங்குவது குறைந்தது, விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. மீட்டர், 45ஆக இருந்த துணி, தற்போது, 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.இந்த வாரத்தில் மட்டும், 500 கோடி ரூபாய் மதிப்பிலான, ஒரு கோடி மீட்டர் துணிகள் பல்லடத்தில் தேக்கமடைந்துள்ளன. இந்த காரணங்களால், வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாமல், 12 ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இச்சூழலில், விசைத்தறியாளர்கள் தொடர்ந்து கூலி உயர்வு வலியுறுத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் சில ரகங்களுக்கு கூலி உயர்வை நாங்களே வழங்கி வருகிறோம்.நெருக்கடியான இந்த நிலையை கருத்தில் கொண்டு, நாளை (இன்று) முதல், நஷ்டத்தை ஏற்படுத்தும் துணி ரகங்களின் உற்பத்தி நிறுத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X