நிறைவான கல்வி வளமான வாழ்வை தரும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிறைவான கல்வி வளமான வாழ்வை தரும்

Added : அக் 08, 2021
Share
பந்தலுார்:அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், பந்தலுார் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்லுாரி தலைமை வகித்து பேசுகையில், ''அரசு பள்ளியில் படித்தவர்கள், தற்போது உலக நாடுகள் வியக்கும் வகையில், பல திறன் வாய்ந்த பணிகளில் உள்ளனர். எனவே,
 நிறைவான கல்வி  வளமான வாழ்வை தரும்

பந்தலுார்:அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், பந்தலுார் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்லுாரி தலைமை வகித்து பேசுகையில், ''அரசு பள்ளியில் படித்தவர்கள், தற்போது உலக நாடுகள் வியக்கும் வகையில், பல திறன் வாய்ந்த பணிகளில் உள்ளனர். எனவே, மாணவர்கள் கல்வியை கைவிடாமல் கற்று வாழ்வில் வளம் பெற வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, உதவி இயக்குனர் சுப்ரமணியன், உதவி வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்விதகுதி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த கண்காட்சி நடத்தப்பட்டது. ஆசிரியர் செந்தில் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X