ஆக்சிஜன் பிளான்ட்!அரசு மருத்துவமனைகளில் திறப்பு :பிரதமர் மோடி துவக்கி வைத்தார்| Dinamalar

தமிழ்நாடு

ஆக்சிஜன் பிளான்ட்!அரசு மருத்துவமனைகளில் திறப்பு :பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

Added : அக் 08, 2021
Share
மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைகளில், அமைக்கப்பட்ட ஆக்சிஜன் பிளான்ட்கள் நேற்று முதல்செயல்பாட்டுக்கு வந்தன.பிரதமர் மோடி, காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.*பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில், தேக்கம்பட்டி ஐ.டி.சி., நிறுவனத்தின், 65 லட்ச ரூபாய் நிதி உதவியுடன், ஆக்சிஜன் பிளான்ட், அரசு அனுமதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.சென்னை, ராஜீவ்காந்தி
 ஆக்சிஜன் பிளான்ட்!அரசு மருத்துவமனைகளில் திறப்பு :பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைகளில், அமைக்கப்பட்ட ஆக்சிஜன் பிளான்ட்கள் நேற்று முதல்செயல்பாட்டுக்கு வந்தன.பிரதமர் மோடி, காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
*பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில், தேக்கம்பட்டி ஐ.டி.சி., நிறுவனத்தின், 65 லட்ச ரூபாய் நிதி உதவியுடன், ஆக்சிஜன் பிளான்ட், அரசு அனுமதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அமைக்கப்பட்ட, ஆக்சிஜன் பிளான்டை, பிரதமர் மோடி, நேற்று காணொளி வாயிலாக, நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.அப்போது, பெ.நா.பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அமைக்கப்பட்ட, ஆக்சிஜன் பிளான்டுகளும், மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.பெ.நா.பாளையத்தில் நடந்த துவக்க விழாவில், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து, பெ.நா.பாளையம், அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சேரலாதன் கூறுகையில்,"இந்த ஆக்சிஜன் பிளான்ட், ஒரு நிமிடத்தில், 250 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் பெற்றது. 250 நோயாளிகள் வரை, ஒரே நேரத்தில், ஆக்சிஜன் தரமுடியும்.மின்தடை ஏற்பட்டாலும், சிலிண்டர்களில் ஆக்சிஜன் சேகரிக்கப்படுவதால், தடையின்றி, ஆக்சிஜன் வழங்க முடியும்.இதற்காக, 30க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில், தயார் நிலையில் உள்ளன" என்றார்.
*மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், பிரதமரின் சிறப்பு நிதி திட்டத்தின் கீழ், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், நிமிடத்திற்கு, 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும், பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் கண்ணன், மருத்துவத்துறை மாவட்ட திட்ட அலுவலர் டாக்டர் வெங்கடேசன், முன்னாள் தலைமை டாக்டர் குருசாமி, டாக்டர்கள் விஜயகிரி, மனோகரன், சரவணன், ஜெயராமன், செவிலியர்கள், தலைமை மருந்தாளுநர், மருத்துவத் துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்-நமது நிருபர் குழு-.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X