பொது செய்தி

தமிழ்நாடு

எப்போதான் தடுப்பணை கட்டுவீங்க ஆபீசர்? கலெக்டர் அலுவலகத்தில் மனு

Added : அக் 08, 2021
Share
Advertisement
அன்னுார்:கஞ்சப்பள்ளியில், தடுப்பணை கட்டப்படாததால், மழை நீர் வீணாகிறது என, கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.அன்னுார் ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் சென்னியப்பன், கோவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனு:கஞ்சப்பள்ளி ஊராட்சியில், கஸ்துாரி குட்டையில், தடுப்பணை கட்ட வேண்டும் என, விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்திலும், அன்னுார் ஊராட்சி ஒன்றிய

அன்னுார்:கஞ்சப்பள்ளியில், தடுப்பணை கட்டப்படாததால், மழை நீர் வீணாகிறது என, கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.அன்னுார் ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் சென்னியப்பன், கோவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனு:கஞ்சப்பள்ளி ஊராட்சியில், கஸ்துாரி குட்டையில், தடுப்பணை கட்ட வேண்டும் என, விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்திலும், அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், பல முறை மனு தரப்பட்டுள்ளது. கஞ்சப்பள்ளி ஊராட்சியில், இதற்காக இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அலுவலகத்தில் தரப்பட்டுள்ளது.ஆனாலும், ஒன்றிய பொறியாளர் பிரிவின் மெத்தனம் காரணமாக இதுவரை பணி துவங்கப்படவில்லை. இதனால் மழைக்காலத்தில், மழைநீர் அந்த பள்ளத்தில் சென்று வீணாகிறது. இங்கு தடுப்பணை கட்டி, மழை நீர் சேமிக்கப்பட்டால், அருகில் உள்ள தோட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும், மழை நீர் வரும் பாதையில் சிறு பாலம் கட்ட வேண்டும். மாவட்ட நிர்வாகம், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X