பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
அன்னுார்:தேர்தல் அலுவலர்களுக்கு, இன்று மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு நடக்கிறது.மாவட்ட கவுன்சிலர் தேர்தல், அன்னுார் ஒன்றியத்தில், 15 ஊராட்சிகளில், நாளை நடக்கிறது. இந்த வார்டில், 59 ஆயிரத்து 203 வாக்காளர்கள் உள்ளனர். 100 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.ஒரு ஓட்டுச்சாவடிக்கு, இரண்டு அலுவலர்கள், இரண்டு உதவியாளர்கள், என, 400 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில், 200 பேருக்கு,
 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

அன்னுார்:தேர்தல் அலுவலர்களுக்கு, இன்று மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு நடக்கிறது.மாவட்ட கவுன்சிலர் தேர்தல், அன்னுார் ஒன்றியத்தில், 15 ஊராட்சிகளில், நாளை நடக்கிறது. இந்த வார்டில், 59 ஆயிரத்து 203 வாக்காளர்கள் உள்ளனர். 100 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.ஒரு ஓட்டுச்சாவடிக்கு, இரண்டு அலுவலர்கள், இரண்டு உதவியாளர்கள், என, 400 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில், 200 பேருக்கு, ஏற்கெனவே, இரண்டு கட்ட பயிற்சி வகுப்பு முடிவடைந்துள்ளது. மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு, இன்று அன்னுார், லாரி உரிமையாளர் மண்டபத்தில், காலை 9:00 முதல், 10:30 மணி வரை நடக்கிறது. பணி புரிய வேண்டிய ஓட்டுச்சாவடி குறித்த உத்தரவு, இவ்வகுப்பில் வழங்கப்படுகிறது. 'மதியம் 3:00 மணிக்குள் ஓட்டுச்சாவடியில் பொறுப்பேற்க வேண்டும்' என, தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.சூலுார்சுல்தான்பேட்டை மண்டல தேர்தல் அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.சுவ்தான்பேட்டை ஒன்றியம் போகம் பட்டி ஊராட்சியில், காலியாக உள்ள, 6 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நாளை தேர்தல் நடக்கிறது. நான்கு பேர் போட்டியிடுகின்றனர்.ஓட்டுப் பெட்டிகள், தேர்தல் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. இன்று மாலை அவை ஓட்டுச்சாவடிக்கு அனுப்பப்பட உள்ளன.நாளை காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்குகிறது. மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. 12 ம்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஓட்டு எண்ணிக்கை அலுவலர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் சுல்தான்பேட்டை அலுவலகத்தில், நேற்று நடந்தது.ஓட்டுப் பெட்டிகளை பாதுகாப்பாக கையாள்வது, ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் பாதுகாப்பாக ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வருதல் உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.தேர்தல் நடத்தும் அலுவலர் லதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அந்தோணி ஆரோக்கிய செல்வன்(நிர்வாகம்) விஜயகுமார் (தணிக்கை) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X