பொது செய்தி

தமிழ்நாடு

மேம்பாலத்தின் கீழ் சமூக விரோத செயல்கள்: நடமாட பொதுமக்கள் அச்சம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
சூலுார்:இருகூர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ், சமூக விரோத செயல்கள் நடப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.திருச்சி ரோடு இருகூர் பிரிவில் இருந்து இருகூர் வரும் வழியில், ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ், அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், நீலம்பூர் பை - பாஸ் ரோட்டுக்கு செல்லும் சாலை உள்ளது. அந்த இடத்தில், இரவு, பகல் என, அனைத்து நேரங்களிலும், ஆண்கள் கூட்டம்

சூலுார்:இருகூர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ், சமூக விரோத செயல்கள் நடப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.திருச்சி ரோடு இருகூர் பிரிவில் இருந்து இருகூர் வரும் வழியில், ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ், அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், நீலம்பூர் பை - பாஸ் ரோட்டுக்கு செல்லும் சாலை உள்ளது. அந்த இடத்தில், இரவு, பகல் என, அனைத்து நேரங்களிலும், ஆண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பொது இடத்தில் புகை பிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன.இதனால், அவ்வழியே நடந்து செல்ல முடியாமல் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவிகள் தவிக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன், இரவுப் பணி முடிந்து அவ்வழியே சென்ற தொழிலாளியை கத்தியை காட்டி மிரட்டி, நகை, பணம் மற்றும் செல்போனை ஒரு கும்பல் பறித்து தப்பியது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:மேம்பாலத்தின் கீழ், எந்நேரமும் இளைஞர்கள் கூடி, கஞ்சா புகைப்பது, மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். போதையில், ரோட்டில் நடந்து செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளை கிண்டலும், கேலியும் செய்கின்றனர். தனியாக செல்வோரை மிரட்டி, நகை மற்றும் பணம், செல் போனையும் பறித்து கொள்கின்றனர். இதுகுறித்து சிங்காநல்லுார் போலீசில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.தொடர்ந்து சட்டவிரோத செயல்கள் அரங்கேறி வருவதால், அவ்வழியே செல்ல அச்சமாக உள்ளது. இப்பகுதியில் கண்காணிப்பை அதிகரிக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X