சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உடும்பு வேட்டை: இரண்டு பேர் கைது

Added : அக் 08, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:தோலம்பாளையத்தில் உடும்பு வேட்டையாடிய இருவரை, வனத்துறையினர் கைது செய்தனர்.பெ.நா.பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட, தடாகம் காப்புக்காடு, கன்னிமார் கோவில் பகுதியில் வனவர் முத்து தலைமையில், வனக் காப்பாளர்கள் சதீஷ்குமார், தினேஷ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர,் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, வேட்டையாடப்பட்டு உயிரிழந்த நிலையில்

பெ.நா.பாளையம்:தோலம்பாளையத்தில் உடும்பு வேட்டையாடிய இருவரை, வனத்துறையினர் கைது செய்தனர்.பெ.நா.பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட, தடாகம் காப்புக்காடு, கன்னிமார் கோவில் பகுதியில் வனவர் முத்து தலைமையில், வனக் காப்பாளர்கள் சதீஷ்குமார், தினேஷ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர,் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, வேட்டையாடப்பட்டு உயிரிழந்த நிலையில் இருந்த 3 உடும்புகள் மற்றும் வலைகள் கிடந்தன.வேட்டையில் ஈடுபட்டு, தப்பியோடிய நபர்களை வனத்துறையினர் தேடி வந்தனர்.இதில், மேட்டுப்பாளையம், பிளிச்சி கவுண்டனுார், சாமாக்காள் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன், 41; மணி, 42, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, வேட்டைக்கு பயன்படுத்திய வெட்டுக்கத்தி கைப்பற்றப்பட்டது.கைது செய்யப்பட்ட இருவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். உடும்புகள், கோவனுார் கால்நடை உதவி மருத்துவரால் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு, புதைக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X