பொது செய்தி

தமிழ்நாடு

பேனர்கள் அகற்றம் :பேரூராட்சி அதிரடி

Added : அக் 08, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:காரமடை பேரூராட்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த, விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிகளில், பேனர் கலாசாரம் அதிகரித்துள்ளது. எங்கு திரும்பினாலும் விளம்பர போர்டுகளாக உள்ளன. இதுதொடர்பான புகார்களை அடுத்து, அனுமதி பெறாத விளம்பர போர்டுகளை அகற்றும்படி, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.அதையடுத்து காரமடை பேரூராட்சியில்,
 பேனர்கள் அகற்றம் :பேரூராட்சி அதிரடி

மேட்டுப்பாளையம்:காரமடை பேரூராட்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த, விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிகளில், பேனர் கலாசாரம் அதிகரித்துள்ளது. எங்கு திரும்பினாலும் விளம்பர போர்டுகளாக உள்ளன. இதுதொடர்பான புகார்களை அடுத்து, அனுமதி பெறாத விளம்பர போர்டுகளை அகற்றும்படி, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.அதையடுத்து காரமடை பேரூராட்சியில், பேரூராட்சி ஊழியர்கள், காரமடை பகுதி முழுவதும் உள்ள விளம்பர பலகைகளை, அகற்றினர். சுகாதார ஆய்வாளர் மாரியப்பன், மேற்பார்வையாளர் கார்த்திக் மற்றும் சுகாதார ஊழியர்கள், விளம்பர போர்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் சுரேஷ்குமார் கூறுகையில்," காரமடை பேரூராட்சி பகுதிகளில், அனுமதி இல்லாமல், 42 இடங்களில் வைத்திருந்த விளம்பர போர்டுகள் அகற்றப்பட்டுள்ளன. நகரில் மேலும் உள்ள விளம்பரத் தட்டிகளை முற்றிலுமாக அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X