பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி பொருட்கள் 'பேக்கிங்' தேர்தல் அலுவலர் ஆய்வு

Added : அக் 08, 2021
Share
Advertisement
அன்னுார்:ஓட்டுச்சாவடிக்கு கொண்டு செல்லப்படும் பொருட்களை தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.அன்னுார் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் தேர்தல் நாளை நடக்கிறது. ஓட்டுச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட உள்ள, தேர்தல் பொருட்களை பேக்கிங் செய்யும் பணி நேற்று அன்னுார் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. இப்பணியை தேர்தல் அலுவலர் ரமேஷ்குமார் ஆய்வு செய்தார்.ரமேஷ்குமார்,
 ஓட்டுச்சாவடி பொருட்கள் 'பேக்கிங்' தேர்தல் அலுவலர் ஆய்வு

அன்னுார்:ஓட்டுச்சாவடிக்கு கொண்டு செல்லப்படும் பொருட்களை தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.அன்னுார் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் தேர்தல் நாளை நடக்கிறது. ஓட்டுச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட உள்ள, தேர்தல் பொருட்களை பேக்கிங் செய்யும் பணி நேற்று அன்னுார் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. இப்பணியை தேர்தல் அலுவலர் ரமேஷ்குமார் ஆய்வு செய்தார்.ரமேஷ்குமார், அதிகாரிகளிடம் கூறுகையில், "ஓட்டுப் பெட்டியில் உள்ள, 72 பொருட்கள் குறித்த பட்டியலை மேலே வைக்க வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர், பெட்டியைத் திறந்த உடன் அந்த பட்டியலைப் பார்த்து 72 பொருட்கள் உள்ளதா என்று ஒப்பிட்டு பார்க்க முடியும். மண்டல அலுவலர்களிடமும் கூடுதலாக ஒவ்வொரு செட் தேர்தல் பொருட்கள் வழங்க வேண்டும். ஓட்டு சீட்டை தவிர இதர பொருட்கள் உபரியாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அரக்கு, மெழுகுவத்தி, சீல், படிவம், கவர் என, ஏதாவது பற்றாக்குறை ஏற்பட்டால் அல்லது ஒரு ஓட்டுச்சாவடிக்கு கிடைக்காமல் இருந்தால், உடனடியாக மண்டல அலுவலர்கள் அந்த ஓட்டுச்சாவடிக்கு சென்று அவற்றை வழங்க வேண்டும்" என்றார்.ஆய்வின்போது, உதவி தேர்தல் முத்துக்குமாரசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நவமணி, அசோகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துராஜ், ராஜா செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X