அரசியல் செய்தி

தமிழ்நாடு

அத்திக்கடவு திட்டம்: சொந்தம் கொண்டாடிய கட்சிகள்: வாக்குறுதி, வாகனப் பேரணியுடன் பிரசாரம் ஓய்வு

Added : அக் 08, 2021
Share
Advertisement
அன்னுார்:உள்ளாட்சி இடைத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. கட்சியினர் செய்ததைச் சொல்லியும், வாக்குறுதிகள் அளித்தும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட கவுன்சிலர் இடைத் தேர்தலில், அத்திக்கடவு திட்டத்துக்கு அ.தி.மு.க., தி.மு.க., இரு கட்சியினரும் சொந்தம் கொண்டாடி, ஓட்டு சேகரித்தனர்.தி.மு.க., இ.கம்யூ சார்பில், மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் ஆனந்தனை
 அத்திக்கடவு திட்டம்: சொந்தம் கொண்டாடிய கட்சிகள்: வாக்குறுதி, வாகனப் பேரணியுடன் பிரசாரம் ஓய்வு

அன்னுார்:உள்ளாட்சி இடைத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. கட்சியினர் செய்ததைச் சொல்லியும், வாக்குறுதிகள் அளித்தும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட கவுன்சிலர் இடைத் தேர்தலில், அத்திக்கடவு திட்டத்துக்கு அ.தி.மு.க., தி.மு.க., இரு கட்சியினரும் சொந்தம் கொண்டாடி, ஓட்டு சேகரித்தனர்.தி.மு.க., இ.கம்யூ சார்பில், மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் ஆனந்தனை ஆதரித்து, பொகலுார், சொக்கட்டாம் பள்ளி, நல்லி செட்டிபாளையம், வடக்கலுார் ஆகிய ஊர்களில் பிரசாரம் நடந்தது.முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம் பேசுகையில், "2006-2011 தி.மு.க., ஆட்சியில், தொழில்நுட்ப வல்லுனர் குழு அமைத்து, அறிக்கை பெற்று, அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் அனைத்தும் செய்யப்பட்டன. எனவே, அத்திக்கடவு திட்டம் வந்ததற்கு தி.மு.க.,வே காரணம்.கடந்த ஐந்து மாதங்களில், தி.மு.க., அரசு அடித்தட்டு மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளது"என்றார்.பிரசாரத்தில், மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச் செயலாளர் தங்கவேல், கட்சியின் ஒன்றியச் செயலாளர் பழனிசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாரிசாமி, அழகிரி உட்பட பலர் பங்கேற்றனர்.அ.தி.மு.க.,அ.தி.மு.க., வேட்பாளர், கருப்பசாமியை ஆதரித்து, ஒட்டர்பாளையம், அ.மேட்டுப்பாளையம் ஊராட்சிகளில், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், பேசுகையில், "மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நிதி நெருக்கடியின்போதும், கொங்கு மண்டல மக்கள் நன்மைக்காக, அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கினார். இத்திட்டம் அ.தி.மு.க.,வால் நிஜமாகி உள்ளது. இரண்டாவது திட்ட ஆய்வு முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. எனினும் தி.மு.க., அரசு முடக்கி வைத்துள்ளது" என்றார்.கருப்பசாமி பேசுகையில், "அ.தி.மு.க., ஆட்சியில், 241 கோடியில் துவக்கப்பட்ட, அன்னுார், அவிநாசி, மோப்பிரிபாளையம் பேரூராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தால், இப்பகுதியில், 25 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்னை இருக்காது. 768 குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டத்தால், ஊராட்சிகளிலும் குடிநீர் பிரச்னை இருக்காது" என்றார்.பிரசாரத்தில், எம்.எல்.ஏ., அருண்குமார், ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, சாய் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பேரணியுடன் நிறைவுதி.மு.க., சார்பில், ஆம்போதி, குப்பனுார் ஊராட்சிகளில் 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பங்கேற்ற பேரணி நடந்தது. பேரணியில் பங்கேற்ற தி.மு.க., வேட்பாளர் ஆனந்தன் குப்பனுார் ஊராட்சி ஆனையூரில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.அ.தி.மு.க., சார்பில், பொகலுார் ஊராட்சியில் 500 இருசக்கர வாகனங்கள் பங்கேற்ற பேரணி நடந்தது. அ.தி.மு.க., வேட்பாளர் கருப்பசாமி அ.மேட்டுப்பாளையத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.அ.ம.மு.க., வேட்பாளர் கஸ்துாரி கரியாம்பாளையத்திலும்; தே.மு.தி.க., வேட்பாளர் குருந்தாசலம் வடக்கலுாரிலும் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.நாம் தமிழர் கட்சியின் மணிகண்டன், ம.நீ.ம., வேட்பாளர் வெங்கிட்டான் மற்றும் சுயேச்சை வேட்பாளர் பொன்னுசாமி ஆகியோர், நேற்று மாலை 5.00 மணிக்கு தீவிர பிரசாரத்தை நிறைவு செய்தனர்.பாய்ந்த பண வெள்ளம்இரு முக்கிய கட்சியினருமே, ஓட்டுக்கு பணம் வழங்கினர். ஒரு கட்சியினர் 300 ரூபாயும், மற்றொரு கட்சியினர் 500 ரூபாயும் வழங்கினர்.பறக்கும் படை, தேர்தல் பார்வையாளர், போலீஸ் என, எந்த அச்சமும் இல்லாமல் , தங்கள் கட்சியினர் என உறுதியாக நம்புவோருக்கு, வீடு வீடாகச் சென்று, வழங்கினர்.இரு கட்சிகளிலும், உள்ளூர் பொறுப்பாளர்கள் குறைவாகவும், வெளியூரை சேர்ந்த கட்சி பொறுப்பாளர்கள் அதிகமாகவும் பண வினியோகத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X