பொது செய்தி

இந்தியா

சபரிமலையில் மகர விளக்கு காலத்தில் தினமும் 25,000 பக்தர்களுக்கு அனுமதி

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருவனந்தபுரம் : மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களின் துவக்கத்தில் சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க தினமும் 25 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை காலம் அடுத்த மாதம், 16ல் துவங்குகிறது.கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில்,
Sabarimala Temple, Kerala, Guidelines, Pilgrim Season

திருவனந்தபுரம் : மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களின் துவக்கத்தில் சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க தினமும் 25 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை காலம் அடுத்த மாதம், 16ல் துவங்குகிறது.கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில், பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா இரண்டாவது அலை பரவல் இன்னும் முழுமையாக குறையாததால் சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.


latest tamil news


இந்நிலையில், திருவனந்தபுரத்தில் முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன் கூறியதாவது: சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைகள், நவ., 16ல் துவங்குகிறது. துவக்கத்தில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் வரை, அய்யப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தால் நிலைமையை ஆய்வு செய்து, முடிவு எடுக்கப்படும்,

மேலும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இம்முறை சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு, 'டோஸ்' தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அய்யப்பனை தரிசித்த பின், பக்தர்கள் யாரும் சபரிமலையில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்ய அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
08-அக்-202106:35:05 IST Report Abuse
Natarajan Ramanathan தமிழக பக்தர்கள் தயவுசெய்து ஒரே ஒரு ரூபாய்கூட உண்டியலில் போடவேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X