அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவில்களை திறக்க கோரி பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
வால்பாறை:கோவில்களை திறக்க கோரி, வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலின் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, பா.ஜ., மண்டல தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்துக்கு, கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல், மண்டல பொதுச்செயலாளர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழக அரசின் ஹிந்துக்கள் விரோத போக்கை கண்டித்தும், உடனடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து
 கோவில்களை திறக்க கோரி பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்

வால்பாறை:கோவில்களை திறக்க கோரி, வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலின் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, பா.ஜ., மண்டல தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்துக்கு, கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல், மண்டல பொதுச்செயலாளர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழக அரசின் ஹிந்துக்கள் விரோத போக்கை கண்டித்தும், உடனடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் திறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும், என, கோஷமிட்டனர்.மாவட்ட வர்த்தக அணி செயலாளர் வினு, மாவட்ட பட்டியலின துணைத்தலைவர் ராஜேந்திரன், மகளிர் அணி மாவட்ட செயற்க்குழு உறுப்பினர் மாரியம்மாள் மற்றும் ஹிந்து முன்னனி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட, அமைப்புக்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X