பொது செய்தி

இந்தியா

துவக்கம் ஜிப்மரில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி பிரிவு... மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறை நிதியுதவி

Added : அக் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி-ஜிப்மர் மருத்துவமனையில், புதிய கொரோனா தடுப்பூசிகளுக்கான மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு துவக்கப்பட்டுள்ளது.இது குறித்து ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தற்போது ஆராய்ச்சியில் உள்ள புதிய கொரோனா தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள, ஜிப்மரில் புதிதாக தடுப்பூசி மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி-ஜிப்மர் மருத்துவமனையில், புதிய கொரோனா தடுப்பூசிகளுக்கான மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு துவக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தற்போது ஆராய்ச்சியில் உள்ள புதிய கொரோனா தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள, ஜிப்மரில் புதிதாக தடுப்பூசி மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு, மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறையின் ஒரு பிரிவான, பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில், நிதியுதவி அளிக்கிறது. தற்போது, ​​ஆறு கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் அவசர பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. இருப்பினும், மேலும் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்க தேவை உள்ளது.அதிக செயல்திறன், குறைவான பக்க விளைவுகள், நீண்ட கால பாதுகாப்பு, ஒரே ஒரு டோஸ், நாசி துவாரங்களில் தெளிப்பு அல்லது சொட்டு மருந்து போன்ற மாற்று வழிகள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான தடுப்பூசிகள் போன்ற பல மேம்பட்ட அம்சங்களுக்கு புதிய தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.எதிர்காலத்தில் கொரோனா ஏற்படுத்தும் வைரஸின் மரபணு மாற்றங்களைக் கொண்ட புதிய வகைகள் வெளிப்படும் போது புதிய தடுப்பூசிகள் தேவைப்படலாம். எனவே, உலகளவில் புதிய கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.தற்போது 120க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மருத்துவ ஆராய்ச்சியின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. தடுப்பூசிகள் புதிதாக உருவாக்கப்படுவதால், இவை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.ஜிப்மரில் உள்ள கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிப் பிரிவு, அத்தகைய வளர்ச்சியில் பங்கு வகிக்கும். இப் பிரிவு, புதிய தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்க ஆர்வமுள்ள நபர்களின் பட்டியலை தயாரிக்க உள்ளது.எனவே, ஒவ்வொருவரும் புதிய கொரோனா தடுப்பூசி மீதான சோதனைகளில் சேர முன்வந்து, நம் நாட்டிற்கும் குடிமக்களுக்கும் உதவலாம்.இதற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் இந்த பரிசோதனையில் பங்கேற்கலாம்.ஆர்வமுள்ள நபர்கள் https://bit.ly/3ypMREy என்ற இணைப்பினை தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X