மரத்தில் கார் மோதி விபத்து ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
மயிலம்-மயிலம் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார். 5 பேர் காயமடைந்தனர்.விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல், 40; மயிலத்தில் ஜெனரல் ஸ்டோர் நடத்தி வருகிறார்.இவர், தனது குடும்பத்தினருடன் 2 நாட்களுக்கு முன் திருப்பதிக்கு இண்டிகா காரில் சென்றார்.தரிசனம் முடிந்து, மயிலம் திரும்பினார். திண்டிவனம், கூட்டேரிப்பட்டு அடுத்த முப்புளி கிராமம்

மயிலம்-மயிலம் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார். 5 பேர் காயமடைந்தனர்.விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல், 40; மயிலத்தில் ஜெனரல் ஸ்டோர் நடத்தி வருகிறார்.இவர், தனது குடும்பத்தினருடன் 2 நாட்களுக்கு முன் திருப்பதிக்கு இண்டிகா காரில் சென்றார்.தரிசனம் முடிந்து, மயிலம் திரும்பினார். திண்டிவனம், கூட்டேரிப்பட்டு அடுத்த முப்புளி கிராமம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணியளவில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதியது.இதில், காரை ஓட்டி வந்த பழனிவேல், அவரது தந்தை ராமசாமி, 75; தாய் அம்பிகா, 72; மனைவி வெங்கடேஸ்வரி, 35; மகள் தீபா, 6; நித்தின்,5; ஆகிய 6 பேரும் படுகாயமடைந்தனர்.மயிலம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, ராமசாமி இறந்தார்.துாக்க கலக்கத்தில் விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X