பொது செய்தி

தமிழ்நாடு

'பார்க்கிங்' இடமாக நெடுஞ்சாலையின் இருபுறமும்

Added : அக் 08, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம்பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது.இப்பகுதியில் பல வகையான கடைகள், தனியார் அலுவலகங்கள், மருத்துவமனை, பேக்கரிகள் உள்ளதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து திரும்புகின்றனர்.இது தவிர, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், பழநி, தாராபுரம், உள்ளிட்ட பல நகரங்களுக்கு செல்லும் பயணிகளும் இந்த பகுதியை

மடத்துக்குளம்:கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம்பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது.இப்பகுதியில் பல வகையான கடைகள், தனியார் அலுவலகங்கள், மருத்துவமனை, பேக்கரிகள் உள்ளதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து திரும்புகின்றனர்.
இது தவிர, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், பழநி, தாராபுரம், உள்ளிட்ட பல நகரங்களுக்கு செல்லும் பயணிகளும் இந்த பகுதியை பயன்படுத்துகின்றனர். இதனால், பஸ் ஸ்டாண்ட் பகுதி மக்கள் நெருக்கடி அதிகமுள்ள பகுதியாக உள்ளது.நெருக்கடியான இந்த பகுதியில், பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலும் அமைந்துள்ளது.தேசிய நெடுஞ்சாலையிலிருந்து, பக்கவாட்டில் 200 மீ., நீளத்தில் அமைந்துள்ள ரோடு வழியாக பஸ்கள் சென்று, பஸ் ஸ்டாண்ட்க்குள் நுழைகிறது.
இந்த ரோட்டின் இருபுறமும் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கடைகளுக்கும், இங்குள்ள அலுவலகங்களுக்கும் வரும் வாடிக்கையாளர்கள், தங்கள் டூ-வீலர்களை ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்துவதால் பஸ்கள் உள்ளே சென்று திரும்புவதற்கு மிகவும்சிரமமாக உள்ளது. இதோடு, கனரா வங்கி பகுதியில் தொடங்கி பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் இதுபோலவே வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகிறது.
பொதுமக்கள் கூறியதாவது: பஸ் ஸ்டாண்ட் அருகே, ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதால் பஸ்கள் பயன்பாட்டுக்கான இடம் குறைவாக உள்ளது. இதனால், நெருக்கடி ஏற்பட்டு சில விபத்துகளும் நடந்துள்ளன. பாதசாரிகள் நடந்து செல்ல முடிவதில்லை.இதற்கு தீர்வாக பஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோடு மற்றும் நால்ரோடு தொடங்கி செக்போஸ்ட் வரை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஆக்கிரமித்து, 'பார்க்கிங்' செய்யப்படாமல் இருக்க அரசுத்துறையினர் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X