சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பண்ருட்டியில் போலீசார் முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைத்ததற்கு எதிர்ப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
பண்ருட்டி-பண்ருட்டியில் வீட்டின் பூட்டை போலீசார் முன்னிலையில் உடைத்ததற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் அருகில் சாந்தி என்பவரின் வீடு உள்ளது. இவர் கடன் வாங்கியதற்காக ஆவணம் ஏதும் பதிவாகாத நிலையில், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த

பண்ருட்டி-பண்ருட்டியில் வீட்டின் பூட்டை போலீசார் முன்னிலையில் உடைத்ததற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் அருகில் சாந்தி என்பவரின் வீடு உள்ளது. இவர் கடன் வாங்கியதற்காக ஆவணம் ஏதும் பதிவாகாத நிலையில், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவர் ஏலச்சீட்டு நடத்தும் அலுவலகமாக பயன்படுத்தி வந்தார். இந்த இடம் குறித்து சாந்தி, மாரிமுத்து இடையே பிரச்னை இருந்தது. கடந்த 5 மாதங்களுக்கு முன் மாரிமுத்து இறந்தார். அவர் நடத்திய ஏலச்சீட்டில் பணம் கிடைக்காமல் பாதித்த பொதுமக்கள் மாரிமுத்துவின் வீடு, சாந்தி பெயரில் உள்ள அலுவலக வீட்டை பூட்டி, கடலுார் பொருளாதார குற்றவியல் போலீசாரிடம் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் சாந்தி தனது வீட்டை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர். நேற்று மாலை 5:30 மணியளவில் சப் இன்ஸ்பெக்டர் தீபன் முன்னிலையில் மாரிமுத்து அலுவலகமாக பயன்படுத்திய வீட்டின் பூட்டை சாந்தி உடைத்தார்.இது குறித்து தகவலறிந்த பொது மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் திரண்டு போலீசாரை முற்றுகையிட்டனர். பொருளாதார குற்றவியல் பிரிவில் வழக்கு உள்ளது. மாரிமுத்து ஏலச்சீட்டு நடத்திய ஆவணங்கள் அந்த வீட்டின் உள்ளே உள்ளது. வீட்டின் பூட்டை உடைத்தது தவறு. தேவையெனில் பொருளாதார குற்றத்தடுப்பு போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் வீட்டின் உள்ளே இருக்கும் ஆவணங்களை எடுத்த பின், உடைப்பதில் ஆட்சேபனை இல்லை என்றனர். இதையடுத்து போலீசார் பூட்டை உடைக்காமல் விட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X