பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பூசி சான்றிதழிலும் போலி

Added : அக் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் பலர், தடுப்பூசி போட்டுக் கொண்டதாக போலியாக சான்றிதழ் சமர்ப்பித்து அரசை ஏமாற்றுவதோடு, கொரோனா பரவலுக்கும் காரணமாக இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவலை தடுத்திட புதுச்சேரி அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனையொட்டி, கடந்த மார்ச் மாதம், முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி

புதுச்சேரி-புதுச்சேரியில் பலர், தடுப்பூசி போட்டுக் கொண்டதாக போலியாக சான்றிதழ் சமர்ப்பித்து அரசை ஏமாற்றுவதோடு, கொரோனா பரவலுக்கும் காரணமாக இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவலை தடுத்திட புதுச்சேரி அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனையொட்டி, கடந்த மார்ச் மாதம், முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை துவங்கியது.தடுப்பூசி போட அச்சம்பின்னர், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டோர் என படிப்படியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இருப்பினும், தடுப்பூசி மீதான அச்சம் காரணமாக, சுகாதாரத் துறையினரே அதை செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டினர்.இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அதிகரித்தது. தினசரி 2,000க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நோய் தொற்றால் தினசரி 30க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.அரசு கெடுபிடிகொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்ததை தொடர்ந்து, தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரப்படுத்தியது,இதற்காக அரசு தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிவோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என எச்சரித்தது.தொடரும் தொற்றுஅரசின் கெடுபிடி காரணமாக, மாநிலத்தில் கடந்த 7 மாதங்களில், இதுவரை 70 சதவீதத்தினர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.இருப்பினும், மாநிலத்தில் தினசரி 50 முதல் 100 பேர் கொரோனா தொற்றால் பாதித்து வருகின்றனர். வாரத்தில் மூன்று அல்லது நான்கு பேர் கொரோனா தொற்றால் இறப்பது தொடர்கிறது.தமிழகத்தில் குறைவுஆனால், அருகாமையில் உள்ள தமிழக மாவட்டங்களான கடலுார், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 20க்கும் கீழாகவே உள்ளது.இறப்பு எண்ணிக்கையும் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டாகவே உள்ளது. இந்த மாவட்டங்களில் 65 முதல் 67 சதவீதத்தினர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.சந்தேகம்புதுச்சேரி மாநிலத்தை விட அதிகம் மக்கள் தொகை உள்ள, குறைவாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள தமிழக மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைவாக உள்ளது.ஆனால், மக்கள் தொகை குறைவாக உள்ள புதுச்சேரி மாநிலத்தில் 70 சதவீதத்தினர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள நிலையில், தொற்று பரவலும், அதனால் ஏற்படும் இறப்பும் தொடர்வது பல சந்தேகங்களை எழுப்பி வருகிறது.அதிர்ச்சி தகவல்இந்நிலையில், அரசின் கெடுபிடி காரணமாக, தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் கோரின.அதன்பேரில், ஊழியர்கள் சமர்ப்பித்த சான்றுகளை ஆய்வு செய்ததில், பல சான்றிதழ்கள் போலியானவை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.போலி சான்றிதழ் தயாரிப்புஅதாவது, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவரின் சான்றிதழை ஸ்கேன் செய்து, அதில் ஊசி போட்டுக் கொள்ளாதவரின் பெயர் மற்றும் அவரது ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்து, நிர்வாகத்திடம் வழங்கி ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது.இதுபோன்ற நபர்களால் தான் கொரோனா பரவல் தொடர்வதாக, சுகாதாரத் துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும், இந்த மோசடியை தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.நடவடிக்கை நிச்சயம்இதுகுறித்து சுகாதாரத் துறை செயலர் அருணிடம் கேட்டபோது, 'போலி சான்றிதழ் விவகாரம் தற்போது தான் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரித்து, போலி சான்றிதழ் தயாரித்தவர் மற்றும் சமர்ப்பித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X