சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொத்து தகராறில் தம்பி கொலை

Added : அக் 08, 2021
Share
Advertisement
விழுப்புரம்-சொத்து தகராறில் தம்பியைக் கொலை செய்த வழக்கில், அண்ணனுக்கு விழுப்புரம் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் அசோகன், 45; விவசாயி. இவரது அண்ணன் ஆனந்தன், 52; இருவருக்கும் பொதுவாக அப்பகுதியில் 3 ஏக்கர் நிலம் உள்ளது.இந்த நிலத்தை பாகப் பிரிவினை செய்வது தொடர்பாக இருவருக்கும்

விழுப்புரம்-சொத்து தகராறில் தம்பியைக் கொலை செய்த வழக்கில், அண்ணனுக்கு விழுப்புரம் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் அசோகன், 45; விவசாயி. இவரது அண்ணன் ஆனந்தன், 52; இருவருக்கும் பொதுவாக அப்பகுதியில் 3 ஏக்கர் நிலம் உள்ளது.இந்த நிலத்தை பாகப் பிரிவினை செய்வது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது.கடந்த 2019 செப்டம்பர் 7ம் தேதி, இரவு 9:00 மணியளவில் அசோகன், நிலத்தை பாகப் பிரிவினை செய்து தரும்படி ஆனந்தனிடம் கேட்டார்.ஆனந்தன் மறுத்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஆனந்தன், மண்வெட்டியால் அசோகன் தலையில் வெட்டினார்.படுகாயமடைந்த அசோகன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.கண்டாச்சிபுரம் போலீசார், ஆனந்தனை கைது செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.இந்த வழக்கில் சாட்சிகளின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி இளவழகன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.அதில், குற்றவாளி ஆனந்தனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராத தொகையைக் கட்டத் தவறினால் மேலும், 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.இதையடுத்து, ஆனந்தன் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X