பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை மருத்துவமனைக்கு 60 ஆண்டுகளாக தவம்: விவசாயிகள் கோரிக்கையை அரசு நிறைவேற்றுமா

Added : அக் 08, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தாலுகாவில், ஒன்பது இடங்களில் கால்நடை மருந்தகங்கள் இருந்தும், கால்நடை மருத்துவமனை இல்லாதது, விவசாயிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.விவசாயிகள் கால்நடை வளர்ப்பை முக்கிய தொழிலாக மேற்கொண்டுள்ளனர். ஆடு, மாடு வளர்ப்பிலும், பால் உற்பத்தியிலும் உபரி வருமானம் கிடைப்பதால், விவசாயிகள் கால்நடை வளர்ப்புக்கு முக்கியத்துவம்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தாலுகாவில், ஒன்பது இடங்களில் கால்நடை மருந்தகங்கள் இருந்தும், கால்நடை மருத்துவமனை இல்லாதது, விவசாயிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.விவசாயிகள் கால்நடை வளர்ப்பை முக்கிய தொழிலாக மேற்கொண்டுள்ளனர். ஆடு, மாடு வளர்ப்பிலும், பால் உற்பத்தியிலும் உபரி வருமானம் கிடைப்பதால், விவசாயிகள் கால்நடை வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.குளிர், மழை மற்றும் வெயில் காலங்களில் கால்நடைகள் பல்வேறு வகை நோய்களால் பாதிக்கப்படுகின்றன. சமீபகாலமாக, கோமாரி நோயால் கறவைகள் பாதிப்புக்கு உள்ளாவதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கிறது.கால்நடைகளை பாதுகாக்கவும், நோய் தாக்குதலுக்கு உள்ளாகும், கால்நடைகளை பாதுகாக்கவும் கால்நடை மருந்தகங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு வட்டாரத்திலும், குறைந்தபட்சம், ஒன்து முதல் 10 கால்நடை மருந்தகங்கள் செயல்படுகின்றன. இவைகள் வாயிலாக, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன.மேலும், கால்நடைகள் தீவிர பாதிப்புக்கு உள்ளாகும் போதும், கன்று ஈனும் காலங்களிலும், கால்நடை மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றன. ஒன்றிய அளவில், ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கால்நடை மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் கஞ்சம்பட்டி, வடக்கு ஒன்றியத்தில் நல்லிக்கவுண்டன்பாளையம், ஆனைமலை ஒன்றியத்தில் வேட்டைக்காரன்புதுாரில் கால்நடை மருத்துவமனைகள் செயல்படுகின்றன.பொள்ளாச்சி கோட்டத்தில், வடக்கு, தெற்கு, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியங்களில், 37 கால்நடை மருந்தகங்கள் செயல்படுகிறது. இவற்றில், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் மட்டும் கப்பளாங்கரை, சொக்கனுார், மெட்டுவாவி, காட்டம்பட்டி, பனப்பட்டி, வடசித்துார், சொலவம்பாளையம், கிணத்துக்கடவு, கோவில்பாளையம் ஆகிய, ஒன்பது இடங்களில் கால்நடை மருந்தகங்கள் செயல்படுகின்றன.இவற்றில், வடசித்துார், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மருந்தகங்கள், காமராஜர் ஆட்சி காலத்தில் இருந்து செயல்படுகின்றன. கிணத்துக்கடவு ஒன்றியத்தில், கால்நடை மருத்துவமனை அமைத்து தீவிர சிகிச்சை அளிக்க, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ.,க்களிடம் விவசாயிகள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.இது விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மத்தியில், கடந்த, 60 ஆண்டு காலமாக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய, தி.மு.க., ஆட்சியிலாவது, கிணத்துக்கடவு ஒன்றியத்தில், கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X