இருப்பது ஒரே ஒரு மைதானம்: அதுவும் சகதி மயமான அவலம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், மக்கள் உடற்பயிற்சி, விளையாட்டுகளில் ஈடுபட இருந்த ஒரே மைதானமும், மழையால் சேறும் சகதியுமாக மாறியுள்ளது.பொள்ளாச்சி நகரில், உடல் நலனுக்காக நடைப்பயிற்சி செய்யும் முதியவர்கள், கிரிக்கெட், புட்பால் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடும் இளைஞர்கள், தடகள பயிற்சி செய்ய விரும்பும் வீரர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே மைதானம், பொள்ளாச்சி - பாலக்காடு
 இருப்பது ஒரே ஒரு மைதானம்: அதுவும் சகதி மயமான அவலம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், மக்கள் உடற்பயிற்சி, விளையாட்டுகளில் ஈடுபட இருந்த ஒரே மைதானமும், மழையால் சேறும் சகதியுமாக மாறியுள்ளது.பொள்ளாச்சி நகரில், உடல் நலனுக்காக நடைப்பயிற்சி செய்யும் முதியவர்கள், கிரிக்கெட், புட்பால் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடும் இளைஞர்கள், தடகள பயிற்சி செய்ய விரும்பும் வீரர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே மைதானம், பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம் மட்டுமே.சமத்துார் ராமஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தின் ஒருபகுதி 'ஸ்கேட்டிங்' மைதானமாகவும், மற்றொரு பகுதி அரசு கல்லுாரியாகவும் மாற்றியுள்ளதால், மைதானம் சுருங்கி விட்டது.மகாலிங்கபுரம் ரவுண்டானாவும், கொரோனா பரவலுக்கு பிறகு திறக்கப்படுவதில்லை. இச்சூழலில், விளையாட்டு ஆர்வலர்களுக்கு தஞ்சம் கொடுத்து வந்த, நகராட்சி ஆண்கள் பள்ளி மைதானம், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறி, விளையாடுவதற்கோ, நடைபயிற்சி மேற்கொள்வதற்கோ லாயிக்கற்றதாக மாறி விட்டது.இதனால், உடல் நலன், விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்கள், தகுந்த மைதானமின்றி வேதனையில் உள்ளனர். பள்ளி மைதானத்தை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X