பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே இடத்தில் இரு வி.ஏ.ஓ.,க்கள் :ஒரு அலுவலகம் இடம் மாறுமா?

Added : அக் 08, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:சொக்கனுாரில் செயல்படும் இரண்டு வி.ஏ.ஓ., அலுவலகங்ளில், ஒன்றை வீரப்பகவுண்டனுாருக்கு மாற்ற வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.கிணத்துக்கடவு ஒன்றியம், சொக்கனுார் ஊராட்சியில் வீரப்பகவுண்டனுார், சொக்கனுார், பாலார்பதி, சட்டக்கல்புதுார், பழனிக்கவுண்டனுார், கோவிந்தநாயக்கனுார், முத்துக்கவுண்டனுார், ரங்கேகவுண்டனுார் என எட்டு கிராமங்களும், மூன்று

கிணத்துக்கடவு:சொக்கனுாரில் செயல்படும் இரண்டு வி.ஏ.ஓ., அலுவலகங்ளில், ஒன்றை வீரப்பகவுண்டனுாருக்கு மாற்ற வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.கிணத்துக்கடவு ஒன்றியம், சொக்கனுார் ஊராட்சியில் வீரப்பகவுண்டனுார், சொக்கனுார், பாலார்பதி, சட்டக்கல்புதுார், பழனிக்கவுண்டனுார், கோவிந்தநாயக்கனுார், முத்துக்கவுண்டனுார், ரங்கேகவுண்டனுார் என எட்டு கிராமங்களும், மூன்று மலைவாழ் மக்கள் வசிக்கும் குடியிருப்புகளும் உள்ளன.இக்கிராமங்களை நிர்வகிக்கும் பொறுப்பை, இரண்டு கிராம நிர்வாக அலுவலர்கள் வகிக்கின்றனர். இவர்களது அலுவலகங்கள், சொக்கனுார் ஊராட்சி அலுவலகம் அருகிலேயே அமைந்துள்ளன. இவற்றில், கேரள எல்லையில் அமைந்துள்ள ரங்கேகவுண்டன்புதுார், கோவிந்தநாயக்கனுார், பாலார்பதி, வீரப்பகவுண்டனுார் மற்றும் சட்டக்கல்புதுாரில் இருந்து வருபவர்கள், சுமார், 3 - 7 கி.மீ., நடந்து அல்லது இருசக்கர வாகனங்களில் வந்து, வி.ஏ.ஓ.,வை சந்திக்க வேண்டும். இது, மிகுந்த சிரமமாக இருப்பதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இதனால், ஒரு வி.ஏ.ஓ., அலுவலகத்தை வீரப்பகவுண்டனுார் கிராமத்துக்கு மாற்ற வேண்டும் என, கிணத்துக்கடவு தாசில்தார், பொள்ளாச்சி சப்- கலெக்டர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X