'சர்வர்' வேகம் குறைவு; ஆசிரியர்கள் திணறல்

Added : அக் 08, 2021
Share
Advertisement
உடுமலை:தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 'எமிஸ்' சர்வரில் மாணவர்களின் தகவல்களை பதிவேற்றம் செய்ய முடியாமல் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.பள்ளிக் கல்வித்துறையில், பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட விபரங்களை சேகரிக்க 'எமிஸ்' திட்டம் பயன்பாட்டில் உள்ளது. அவ்வகையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை, தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் 'எமிஸ்' இணைய

உடுமலை:தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 'எமிஸ்' சர்வரில் மாணவர்களின் தகவல்களை பதிவேற்றம் செய்ய முடியாமல் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.பள்ளிக் கல்வித்துறையில், பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட விபரங்களை சேகரிக்க 'எமிஸ்' திட்டம் பயன்பாட்டில் உள்ளது. அவ்வகையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை, தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் 'எமிஸ்' இணைய தளத்தின் வாயிலாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.உடுமலை கல்வி மாவட்டத்தில், இதற்கென, பள்ளிகளில், சில ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் மற்றும் ஆன்லைன் வசதி இருந்தாலும், முறையாக சர்வர் இணைப்பு சரிவர கிடைப்பதில்லை.தகவல்களை பதிவேற்ற முடியாமல் ஆசிரியர் திணறி வருகின்றனர். மேலும், அப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், காலை நேர பாட வகுப்புகளை நடத்த முடியாத சூழலும் ஏற்படுகிறது.ஆசிரியர்கள் கூறுகையில், 'இணையதளம், சரியான வேகமும், திறனும் இல்லாமல் உள்ளது. இத்தகைய பணிகளை, கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களை நியமித்து மேற்கொள்ள வேண்டும். அதற்கு மாறாக, ஆசிரியர்கள் கையில் திணிக்கப்படுகிறது. இதன் காரணமாக, கற்றல் பணி பாதிக்கப்படுகிறது. 'எமிஸ்' இணையத்தில் பதிவேற்றம் செய்யும் வேலை ஆசிரியர்களுக்கானது அல்ல என்பதை, கல்வித்துறை அதிகாரிகள் உணர வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X