ஒரு போன் போதுமே!

Added : அக் 08, 2021
Share
Advertisement
தார் ரோடு அமைக்க கோரிக்கைகாட்டம்பட்டி, அரசூர் ரோட்டில், தார் ரோடு அமைக்க கற்களை நிரப்பி பல மாதங்களாகியும் பணி துவங்காததால், மக்கள் பயன்படுத்த சிரமமாக உள்ளது. தார் ரோடு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்.நந்தகோபால், நாராயணநாயக்கன்புதூர்.ஆக்கிரமிப்புகளால் இம்சைவால்பாறை காந்தி சிலை பஸ் ஸ்டாண்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, அங்குள்ள

தார் ரோடு அமைக்க கோரிக்கைகாட்டம்பட்டி, அரசூர் ரோட்டில், தார் ரோடு அமைக்க கற்களை நிரப்பி பல மாதங்களாகியும் பணி துவங்காததால், மக்கள் பயன்படுத்த சிரமமாக உள்ளது. தார் ரோடு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்.நந்தகோபால், நாராயணநாயக்கன்புதூர்.
ஆக்கிரமிப்புகளால் இம்சை
வால்பாறை காந்தி சிலை பஸ் ஸ்டாண்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, அங்குள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும். ரோட்டோரத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் அமைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அ.வெண்ணிலா, வால்பாறை.
'குடி'மகன்கள் அட்டகாசம்
ஆனைமலை, சோமந்துரைசித்துார் துவக்கப்பள்ளி வளாகத்தை, 'குடி'மகன்கள் 'பார்' ஆக மாற்றியுள்ளனர். மது அருந்துவது, கஞ்சா புகைப்பது என பல சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். கோட்டூர் போலீசார் கண்டுகொள்வதில்லை.எம். சண்முகம், சோமந்துறை.
நிழற்கூரை வசதி இல்லை
பொள்ளாச்சி -- கோவை ரோட்டில், கோவில்பாளையம், தாமரைக்குளம், சிங்கராம்பாளையம், கிணத்துக்கடவு மற்றும் அரசம்பாளையம் பிரிவில் பயணிகள் நிழற்கூரை வசதி இல்லாததால், மக்கள் சிரமப்படுகின்றனர். நிழற்கூரை அமைக்க வேண்டும்.ஆ. இளங்கோ, தாமரைக்குளம்.
சாக்கடை அடைப்பால் அவதி
பொள்ளாச்சி, ஆர்.ஆர்., தியேட்டர் ரோட்டை அடுத்துள்ள, சானிடரி சந்து சாக்கடையில் மண் அடைத்துள்ளதால், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுவதுடன், கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. சாக்கடையை துார்வார வேண்டும்.எஸ்.கந்தசாமி, பொள்ளாச்சி.
ரோடு நிலை படுமோசம்
உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சி ரங்கநாதர் லே-அவுட்டில், சமீபத்தில் பெய்த மழைக்கு, ரோடு பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது.எம்.தங்கவேல், எஸ்.வி.,புரம்.
இறைச்சிக்கழிவால் அவதி
உடுமலை -- தாராபுரம் ரோட்டில், தனியார் பள்ளி அருகே, சின்னவீரம்பட்டி கிராம இணைப்பு ரோட்டில், இறைச்சிக்கழிவுகளை, குவித்து வைப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.ஆர்.சுப்பிரமணியம், உடுமலை.
அச்சுறுத்தும் சாக்கடை
உடுமலை நகராட்சி, 11வது வார்டு, காந்திசந்து பகுதியில், பாதாள சாக்கடை ஆளிறங்கு குழி, மூடி, சிதிலமடைந்து, மக்களை அச்சுறுத்தி வருகிறது.என்.ரவிக்குமார், உடுமலை.
கொசு உற்பத்தி
உடுமலை-தாராபுரம் ரோடு மழை நீர் ஓடை பாலத்தின் அருகில், மழை நீர் பல நாட்களாக, தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் உள்ளது.கே.முருகன், உடுமலை.
அட்டகாசம் தாங்கல!
உடுமலை நகராட்சி பார்க், அரசுபள்ளி அருகில், குடிமகன்கள், காலி பாட்டில்களையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் வீசிச்செல்வது தொடர்கதையாகி உள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.எஸ்.கவிதா, உடுமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X