பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரத்துக்கு ரயில் இயக்க பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

Added : அக் 08, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கோவையில் இருந்து கிணத்துக்கடவு வழியே, துாத்துக்குடி, ராமேஸ்வரம், செங்கோட்டை மற்றும் பொள்ளாச்சிக்கு ரயில்கள், இயக்க வேண்டும் என, ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.கிணத்துக்கடவு ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் புருசோத்தமன் அறிக்கை:கடந்த காலங்களில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து, கோவை, பொள்ளாச்சியில் பணியாற்றும் அரசு

கிணத்துக்கடவு:கோவையில் இருந்து கிணத்துக்கடவு வழியே, துாத்துக்குடி, ராமேஸ்வரம், செங்கோட்டை மற்றும் பொள்ளாச்சிக்கு ரயில்கள், இயக்க வேண்டும் என, ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.கிணத்துக்கடவு ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் புருசோத்தமன் அறிக்கை:கடந்த காலங்களில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து, கோவை, பொள்ளாச்சியில் பணியாற்றும் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரி, பள்ளிக்கும் மாணவர்கள் சென்று வந்தனர். அந்த நிலை மீண்டும் வருமா என எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. அதனால், கோவை - பொள்ளாச்சி ரயில், கோவை - ராமேஸ்வரம், துாத்துக்குடி, செங்கோட்டை மற்றும் திண்டுக்கல் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.இனிமேல் இயக்கவுள்ள ரயில்களை, மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க வேண்டும். மேலும், பயணிகள் வசதிக்காக கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில் 'ரிசர்வேஷன்' டிக்கெட் கவுன்டர் வசதி ஏற்படுத்த வேண்டும். கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தை சுற்றிலும் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. உடனடியாக, முட்புதர்களை அகற்றி, ரயில்வே குடியிருப்புகளையும் சுத்தப்படுத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X