காலாண்டு தேர்வு அறிவிப்பில்லை;அரசு பள்ளி மாணவர்கள் குழப்பம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
உடுமலை;தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளிகளுக்கு தேர்வு அறிவிக்கப்படாததால் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.உடுமலை கல்வி மாவட்டத்தில், 9 முதல், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், பிற வகுப்பு மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' மற்றும் கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள்

உடுமலை;தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளிகளுக்கு தேர்வு அறிவிக்கப்படாததால் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.உடுமலை கல்வி மாவட்டத்தில், 9 முதல், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், பிற வகுப்பு மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' மற்றும் கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில், பல தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஒன்று முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளிகளில் கால அட்டவணை மற்றும் வினாத்தாள் தயார் செய்யப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டுள்ளது.ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை, பள்ளிக்கு வராத மாணவர்கள், வீட்டில் இருந்தபடியே தேர்வு எழுதி, விடைத்தாள்களை சமர்ப்பித்துள்ளனர். ஆனால், அரசு பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு குறித்து அறிவிக்கப்படாததால் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'வழக்கமாக, செப்., மாதம் காலாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், அரசு பள்ளிக்கு, காலாண்டு தேர்வு தொடர்பான அட்டவணை எதுவும் வெளியிடப்படவில்லை,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X