பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.எச்.,ல் ஆக்சிஜன் உற்பத்தி மையம்:பி.எம்., கேர் நிதியில் அமைப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை அரசு மருத்துவமனையில், நோயாளிகள் தேவைக்காக, 'பி.எம்., கேர்' நிதியில், ஆக்சிஜன் உற்பத்தி மையம் நேற்று திறக்கப்பட்டது.உடுமலை அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. அதோடு, மகப்பேறு மருத்துவ பிரிவு, பொது பிரிவு என, சராசரியாக, 300க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு
 ஜி.எச்.,ல் ஆக்சிஜன் உற்பத்தி மையம்:பி.எம்., கேர் நிதியில் அமைப்பு

உடுமலை:உடுமலை அரசு மருத்துவமனையில், நோயாளிகள் தேவைக்காக, 'பி.எம்., கேர்' நிதியில், ஆக்சிஜன் உற்பத்தி மையம் நேற்று திறக்கப்பட்டது.உடுமலை அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. அதோடு, மகப்பேறு மருத்துவ பிரிவு, பொது பிரிவு என, சராசரியாக, 300க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் மூலம் சப்ளை செய்யப்பட்டு வந்த நிலையில், அவசர கால தட்டுப்பாட்டை சமாளிக்கவும், அரசு மருத்துவமனைகளிலேயே, ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்புகளை நிறுவ அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், மத்திய அரசின் பி.எம்.,கேர் நிதி, ஒரு கோடி ரூபாய் மதிப்பில், உடுமலை அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி துவங்கியது.பணிகள் முடிந்து, நேற்று துவக்கி வைக்கப்பட்டது. ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை, கோட்டாட்சியர் கீதா, தாசில்தார் ராமலிங்கம், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் செல்வராஜ், டாக்டர்கள் கவிதா, வனஜா, உமா மகேஸ்வரி, சித்த மருத்துவர் லட்சுமிபதி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர்.டாக்டர்கள் கூறுகையில், 'அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையம், பி.எஸ்.ஏ., தொழில் நுட்பத்தில், காற்றிலிருந்து நேரடியாக, 95.6 சதவீதம் துாய ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்கும்; 500 லிட்டர் உற்பத்தி திறன் கொண்டதாகும். சராசரியாக, 60 முதல், 80 நோயாளிகளுக்கு பிராணவாயு கொடுக்க முடியும். இதன் மூலம், அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் தேவை நிறைவு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X