பொது செய்தி

தமிழ்நாடு

தர்ம சம்ரக் ஷண சமிதியின் சத சண்டி மகா யாகம் துவக்கம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி-தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், சத சண்டி மகா யாகம் நேற்று காலை தொடங்கியது.புதுச்சேரி தர்ம சம்ர ஷண சமிதி சார்பில், இ.சி.ஆர். சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில், நவராத்திரி காலமான நேற்று காலை 7:00 மணிக்கு சத சண்டி மகா யாகம் தொடங்கியது.கோ பூஜை, குரு வந்தனம், விக்னேஸ்வர பூஜை, வேதிகார்ச்சனை, சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, வடுக பூஜை, தம்பதி பூஜை நடைபெற்றது.13 முறை பூர்ணாஹூதி

புதுச்சேரி-தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், சத சண்டி மகா யாகம் நேற்று காலை தொடங்கியது.புதுச்சேரி தர்ம சம்ர ஷண சமிதி சார்பில், இ.சி.ஆர். சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில், நவராத்திரி காலமான நேற்று காலை 7:00 மணிக்கு சத சண்டி மகா யாகம் தொடங்கியது.கோ பூஜை, குரு வந்தனம், விக்னேஸ்வர பூஜை, வேதிகார்ச்சனை, சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, வடுக பூஜை, தம்பதி பூஜை நடைபெற்றது.13 முறை பூர்ணாஹூதி நடந்தது. அதில் 12 பூர்ணாஹூதியில் ஒன்பது கஜம் புடவைகளும், 13வது மகா பூர்ணாஹூதியில் பட்டுப்புடவை, விசேஷ திரவியங்கள், பழங்கள் யாகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, மகா பூர்ணாஹூதியுடன் யாகம் முடிந்தது.மாலை 5:00 மணிக்கு லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடந்தது.அதைத் தொடர்ந்து வேதபாராயணம், மூலமந்திர ஹோமம், ஷோடசோபசார பூஜைகள் மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சத சண்டி மகா யாகம், வரும் 15ம் தேதி வரை தினசரி காலை 7:00 மணிக்கு துவங்கி, நடைபெறுகிறது.தர்ம சம்ரக் ஷண சமிதி தலைவர் சீனிவாசன், செயலாளர் சீத்தாராமன் கூறுகையில், 'இரண்டாம் ஆண்டாக நடைபெறும் சத சண்டி மகா யாகத்தில் பங்கேற்பவர்கள் தீமைகள் விலகி, நன்மை பெறுவர்.யாகத்திற்கு தேவையான பொருள் உதவி, யாக திரவியங்கள், அன்னதானத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கலாம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X