பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு

Added : அக் 08, 2021
Share
Advertisement
வால்பாறை;பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே, வேலைவாய்ப்பு பதிவு செய்யப்படுகிறது. வால்பாறை மலைப்பகுதியில் உள்ள அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், ரொட்டிக்கடை, வால்பாறை, சின்கோனா, சோலையாறு நகர் உள்ளிட்ட பகுதிகளில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் வேலைவாய்ப்புக்கான பதிவினை,
 அரசு பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு

வால்பாறை;பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே, வேலைவாய்ப்பு பதிவு செய்யப்படுகிறது. வால்பாறை மலைப்பகுதியில் உள்ள அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், ரொட்டிக்கடை, வால்பாறை, சின்கோனா, சோலையாறு நகர் உள்ளிட்ட பகுதிகளில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் வேலைவாய்ப்புக்கான பதிவினை, அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். சில பள்ளிகளில் 'நெட்ஒர்க்' பிரச்னையால், வேலைவாய்ப்பு பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் கூறுகையில், 'மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அந்தந்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்வது, மாணவர்களுக்கு பல்வேறு சிரமத்தை குறைத்துள்ளது. வேலைவாய்ப்பு பதிவு செய்யும் பணி, வரும், 18ம் தேதி வரை நடக்கிறது,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X