சிறுமியை திருமணம் செய்த வியாபாரி மீது 'போக்சோ'

Added : அக் 08, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம்-அரியாங்குப்பத்தில் சிறுமியை திருமணம் செய்த தேங்காய் வியாபாரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.அரியாங்குப்பத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, உடல்நிலை பாதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய

அரியாங்குப்பம்-அரியாங்குப்பத்தில் சிறுமியை திருமணம் செய்த தேங்காய் வியாபாரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.அரியாங்குப்பத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, உடல்நிலை பாதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.உடல்நிலை மற்றும் வயது பற்றி டாக்டர்கள் சிறுமியிடம் கேட்ட போது அந்த சிறுமிக்கு வயது 16 என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.அதில், அரியாங்குப்பத்தை சேர்ந்த தேங்காய் வியாபாரி பாபு, 26, தனது அத்தை மகளான சிறுமியை காதலித்து, அவரது பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து குடும்பம் நடத்துவது தெரிந்தது.பாபு மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X