வழிப்பறி கும்பல் தாக்குதல் அரசு ஆசிரியை படுகாயம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
வில்லியனுார்-வில்லியனுார் அருகே, உள்ளாட்சி தேர்தல் பணி முடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய அரசு பள்ளி ஆசிரியர் மீது வழிப்பறி கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி, வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்தவர்சண்முகசுந்தரம், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செங்கொடிபாரதி (37). விழுப்புரம் மாவட்டம்

வில்லியனுார்-வில்லியனுார் அருகே, உள்ளாட்சி தேர்தல் பணி முடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய அரசு பள்ளி ஆசிரியர் மீது வழிப்பறி கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி, வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்தவர்சண்முகசுந்தரம், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செங்கொடிபாரதி (37). விழுப்புரம் மாவட்டம் புதுக்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, திருக்கனுார் அடுத்த சித்தலம்பட்டு அரசு பள்ளியில் அமைக்கப்பட்ட ஓட்டுச் சாவடியில், தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார்.பணி முடிந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு வழுதாவூர் வழியாக, புதுச்சேரிக்கு கணவருடன், மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.இரவு 2:30 மணியளவில், ராமநாதபுரம் பகுதியில் உள்ள பாலத்திற்கும் பிள்ளையார்குப்பம் கிராமத்திற்கும் இடைப்பட்ட இருள் சூழ்ந்த பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.சாலையில் நின்றிருந்த இரு இளைஞர்கள், பைக்கை நிறுத்துமாறு சைகை காட்டினர். சண்முகசுந்தரம் பைக்கை நிறுத்தாமல், வேகமாக மர்ம நபர்களை கடந்து சென்றார்.ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், கையில் வைத்திருந்த கத்தியை வீசியதில் செங்கொடிபாரதி முதுகில் கிழித்து காயம் ஏற்பட்டது.ஊசுட்டேரி லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை யில், செங்கொடிபாரதியை சிகிச்சைக்கு சேர்த்தார்.இது குறித்து வில்லியனுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று பார்த்தபோது யாரும் சிக்கவில்லை.சப் இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்கு பதிந்து, விசாரித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X