மத்திய அரசின் நல திட்டங்களை பாராட்டி பிரதமருக்கு பா.ஜ.,வினர் வாழ்த்து கடிதம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மத்திய அரசின் நல திட்டங்களை பாராட்டி பிரதமருக்கு பா.ஜ.,வினர் வாழ்த்து கடிதம்

Added : அக் 08, 2021
Share
திருக்கனுார்-மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத் திட்டங்களை பாராட்டி, பிரதமர் மோடிக்கு வாழ்த்து கடிதம் அனுப்பும் நிகழ்ச்சியை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.மருத்துவ காப்பீடு, தூய்மை இந்தியா, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 மானியம் வழங்குதல், பயிர் காப்பீடு, இலவசமாக கொரோனா தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை, பிரதமர் மோடி தலைமையிலான

திருக்கனுார்-மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத் திட்டங்களை பாராட்டி, பிரதமர் மோடிக்கு வாழ்த்து கடிதம் அனுப்பும் நிகழ்ச்சியை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.மருத்துவ காப்பீடு, தூய்மை இந்தியா, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 மானியம் வழங்குதல், பயிர் காப்பீடு, இலவசமாக கொரோனா தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு செயல்படுத்தி வருகிறது.இதற்காக, மத்திய அரசை பாராட்டி, பிரதமர் மோடிக்கு மண்ணாடிப்பட்டு தொகுதி சார்பில் ஆயிரம் வாழ்த்து கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி திருக்கனுார் பஜார் வீதியில் நேற்று நடந்தது.அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, பிரதமருக்கு வாழ்த்து கடிதம் அனுப்பி துவக்கி வைத்தார்.முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., பிரமுகர்கள் முத்தழகன், தமிழ்மணி, வீரராகவன், கலியபெருமாள், செல்வகுமார், கண்ணன், சேகர், தொகுதி தலைவர் வேதாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X