பொது செய்தி

இந்தியா

பள்ளிகளிலேயே கல்வி ஊக்கத்தொகை வழங்க சம்பத் எம்.எல்.ஏ., கோரிக்கை

Added : அக் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி-மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகையை அந்தந்த அரசு பள்ளிகளிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சம்பத் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர், முதல்வர் ரங்கசாமியிடம் அளித்துள்ள மனு:மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு அரசு கல்வி ஊக்கத்தொகை வழங்குகிறது.இத்திட்டத்தில் பயன் பெற

புதுச்சேரி-மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகையை அந்தந்த அரசு பள்ளிகளிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சம்பத் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர், முதல்வர் ரங்கசாமியிடம் அளித்துள்ள மனு:மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு அரசு கல்வி ஊக்கத்தொகை வழங்குகிறது.இத்திட்டத்தில் பயன் பெற குடியிருப்பு, சாதி, வருமான சான்று சமர்ப்பிக்க வேண்டும்.இச்சான்றிதழ்களை பெற பெற்றோர் குறைந்தது மூன்று முதல் ஒரு வாரம் வரை தாலுகா அலுவலகங்களுக்கு அலைய வேண்டி உள்ளது.மாணவர்களின் பெற்றோர் அடித்தட்டு மக்களாகவே உள்ளனர். அவர்களின் ஒரு நாள் வருமானமே ரூ.300ல் இருந்து 500 வரை தான் இருக்கும்.உதவித் தொகை பெற அலுவலகங்களுக்கு அலைவதால் அன்றைய வருமானத்தை இழக்க நேரிடு கின்றது. 500 ரூபாய் உதவித்தொகை பெற 2000 ரூபாய்க்கு மேல் இழக்கும் நிலை உள்ளது.மாணவர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் அந்தந்த பள்ளியிலேயே உள்ள நிலையில், இத்தகைய கடினமான நடைமுறை தேவையற்றது. ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகைக்கு சான்றிதழ் பெற அலைய வேண்டி உள்ளது.எனவே முதல்வர் இவ்விஷயத்தில் தலையிட்டு, கல்வி ஊக்கத்தொகையை அந்தந்த பள்ளியிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X