அனைத்து கட்சி கூட்டம் அ.தி.மு.க., வலியுறுத்தல் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

அனைத்து கட்சி கூட்டம் அ.தி.மு.க., வலியுறுத்தல்

Added : அக் 08, 2021
Share
புதுச்சேரி-உள்ளாட்சி தேர்தலுக்கு வார்டு வரையறை செய்வதற்கு முன் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்த வேண்டும் என அ.தி.மு.க., மேற்கு மாநில செயலர் ஓம் சக்தி சேகர் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றது. தனி வார்டு, பழங்குடி மக்கள் வார்டு அறிவிப்பு வெளியிட்டு, 3

புதுச்சேரி-உள்ளாட்சி தேர்தலுக்கு வார்டு வரையறை செய்வதற்கு முன் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்த வேண்டும் என அ.தி.மு.க., மேற்கு மாநில செயலர் ஓம் சக்தி சேகர் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றது. தனி வார்டு, பழங்குடி மக்கள் வார்டு அறிவிப்பு வெளியிட்டு, 3 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் அந்த மூன்று நாட்களும் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வேலை செய்ய வில்லை. இதனால் எந்த அரசியல் கட்சிகளும் வார்டு ஒதுக்கீட்டை பார்க்க முடியவில்லை.தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் வார்டு ஒதுக்கீட்டில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை சுட்டி காட்டியும் தேர்தல் ஆணையம் தானாக தேர்தல் தேதியை அறிவித்தது.இதனால் தற்போது தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போது தீபாவளி பண்டிகை வர உள்ளது. இதை ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும்.தேர்தல் ஆணையம் அனைத்து நிலைகளிலும் ஆய்வு மேற்கொண்டு அனைத்து தரப்பு மக்களின் கருத்தை கேட்டு தேர்தல் தேதியை முடிவு செய்ய வேண்டும். மேலும் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கட்சிகளின் ஆலோசனைகள் பெற வேண்டும். அதன்பிறகு, வார்டு வரையறையை இறுதி செய்து தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X