பொது செய்தி

தமிழ்நாடு

பழுதான சிறு மோட்டார்கள் :நகராட்சி சீரமைக்க கோரிக்கை

Added : அக் 08, 2021
Share
Advertisement
உடுமலை:நகரில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அடிகுழாய்களை மாற்றியமைக்கவும், பழுதான சிறுமின் விசை பம்புகளை சீரமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில், திருமூர்த்தி அணையில் இருந்து, முதல் மற்றும் இரண்டாவது குடிநீர் திட்டங்கள் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.இதற்கென, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் வாயிலாக, 33

உடுமலை:நகரில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அடிகுழாய்களை மாற்றியமைக்கவும், பழுதான சிறுமின் விசை பம்புகளை சீரமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில், திருமூர்த்தி அணையில் இருந்து, முதல் மற்றும் இரண்டாவது குடிநீர் திட்டங்கள் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.இதற்கென, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் வாயிலாக, 33 வார்டுகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டு இணைப்புகளும், 170க்கும் மேற்பட்ட பொதுக்குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நுாறுக்கும் மேற்பட்ட அடிகுழாயுடன் கூடிய ஆழ்துளை கிணறும் உள்ளது.ஆனால், ரோடு விரிவாக்கத்தையொட்டி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், சில அடிகுழாய்கள் மாற்றம் செய்யப்படவில்லை. அவை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது.முன்னதாகவே, அடிகுழாய்களை அமைக்கும்போது, ஆக்கிரமிப்பு நிலப்பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதேபோல்,அதிகப்படியான சிறுமின் விசை பம்புகள், முறையான பராமரிப்பின்றியும் காணப்படுகிறது. எனவே, நகரில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அடிகுழாய்களை மாற்றியமைக்கவும், பழுதான சிறுமின் விசை பம்புகளை சீரமைக்கவும் நகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X