பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றரை ஆண்டுக்கு பிறகு இரு மாநில பஸ்கள் இயக்கம்: சின்னாறு வரை சிரமமில்லை

Added : அக் 08, 2021
Share
Advertisement
உடுமலை;உடுமலையிலிருந்து - சின்னாறு வரை, ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், பஸ் போக்குவரத்து துவங்கியுள்ளது.உடுமலையிலிருந்து, கேரளா மாநிலம், மறையூர், மூணாறு பகுதிகளுக்கு, தமிழகம் மற்றும் கேரளா மாநில பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்த வழித்தடத்தில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது, உடுமலையிலிருந்து,

உடுமலை;உடுமலையிலிருந்து - சின்னாறு வரை, ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், பஸ் போக்குவரத்து துவங்கியுள்ளது.உடுமலையிலிருந்து, கேரளா மாநிலம், மறையூர், மூணாறு பகுதிகளுக்கு, தமிழகம் மற்றும் கேரளா மாநில பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்த வழித்தடத்தில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது, உடுமலையிலிருந்து, மாநில எல்லையான சின்னாறு வரை, உடுமலை கிளையிலிருந்து, இரண்டு அரசு பஸ்களும், கேரளா மாநில பஸ்கள், மூணாறில் இருந்து சின்னாறு வரையும் இயக்கப்பட்டு வருகிறது.பொதுமக்கள், மாநில எல்லையில், இறங்கி, மறு எல்லை வரை, நடந்து சென்று பஸ் ஏறி செல்கின்றனர். பஸ்களில் பயணம் செய்ய, இரண்டு டோஸ் தடுப்பூசி அல்லது, 72 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட, கொரோனா தொற்று இல்லை என்ற சான்று கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.கேரளா மாநிலம், மூணாறு, மறையூர், காந்தலுார், கோவில்கடவு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள், மருத்துவம், மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்களுக்கு உடுமலையை சார்ந்தே உள்ளனர். எனவே, இரு மாநில அரசுகள் பேச்சு நடத்தி, முழுமையான போக்குவரத்தை துவங்கவும், கூடுதல் பஸ்கள் இயக்கவும் வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X