அரசு மீது இந்திய கம்யூ., சாடல் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

அரசு மீது இந்திய கம்யூ., சாடல்

Added : அக் 08, 2021
Share
புதுச்சேரி-பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு அளித்து, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.இந்திய கம்யூ,. மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கை:உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய அறிவிப்பை வெளியிட அனுமதி கோரிய புதுச்சேரி அரசு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு இன்றி

புதுச்சேரி-பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு அளித்து, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.இந்திய கம்யூ,. மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கை:உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய அறிவிப்பை வெளியிட அனுமதி கோரிய புதுச்சேரி அரசு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு இன்றி அறிவிப்பு வெளியிட உள்ளதாக கூறியுள்ளது.இது, அவ்விரு சமுதாய மக்களுக்கும், சமூக நீதிக்கும் இழைக்கப்படும் துரோகமாகும்.உள்ளாட்சி தேர்தல் நடப்பதையோ, பிற்படுத் தப்பட்ட மக்கள் உள்ளாட்சி அமைப்புகளில் ஆட்சிக்கு வருவதையோ புதுச்சேரி அரசு விரும்பவில்லை என்பதை இந்த ரத்து அறிவிப்பு உணர்த்துகிறது.தடை கோருவதற்கு இடமளிக்காத வகையில் குளறுபடிகளை களைந்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு அளித்து உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X