பொது செய்தி

இந்தியா

கஞ்சா விற்போர் மீது நடவடிக்கை கோரி எம்.எல்.ஏ., தலைமையில் போலீசில் மனு

Added : அக் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி-''நுாறடி சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என அசோக்பாபு எம்.எல்.ஏ., தலைமையில் பொது மக்கள், போலீசில் மனு அளித்தனர்.அசோக்பாபு எம்.எல்.ஏ., தலைமையில் பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபுவை சந்தித்து மனு அளித்தனர்.மனுவில்

புதுச்சேரி-''நுாறடி சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என அசோக்பாபு எம்.எல்.ஏ., தலைமையில் பொது மக்கள், போலீசில் மனு அளித்தனர்.அசோக்பாபு எம்.எல்.ஏ., தலைமையில் பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபுவை சந்தித்து மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:முதலியார்பேட்டை நுாறடி சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில், இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை நடக்கிறது. சமூக விரோதிகள் இரவு முழுவதும் முகாமிட்டு கஞ்சா, போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர்.இதனால் இரவு நேரங்களில் பெண்கள் அவ்வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். இது குறித்து பல தடவை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ரயில்வே மேம்பாலத்தின் கீழ் கஞ்சாவுடன் முகாமிடும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இன்ஸ்பெக்டர் ஆவன செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் மத்திய உள்துறையிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.சந்திப்பின்போது பா.ஜ., தொகுதி தலைவர் இன்பசேகர், குடியிருப்பு சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X