பொது செய்தி

தமிழ்நாடு

21 மையங்களில் இன்று முகாம் கோவிஷீல்டு, கோவாக்சின் இருப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை வருவாய் கோட்டத்தில், இன்று தடுப்பூசி செலுத்தும் மையங்கள் குறித்து சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.உடுமலை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட, உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், சிறப்பு முகாம் வாயிலாக இன்று கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.உடுமலை நகராட்சி, பழைய அலுவலக கட்டடத்தில், 1,560 பேருக்கு கோவிஷீல்டு மற்றும் 310 பேருக்கு கோவாக்சின்

உடுமலை:உடுமலை வருவாய் கோட்டத்தில், இன்று தடுப்பூசி செலுத்தும் மையங்கள் குறித்து சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.உடுமலை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட, உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், சிறப்பு முகாம் வாயிலாக இன்று கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.உடுமலை நகராட்சி, பழைய அலுவலக கட்டடத்தில், 1,560 பேருக்கு கோவிஷீல்டு மற்றும் 310 பேருக்கு கோவாக்சின் செலுத்தப்படுகிறது. அமணலிங்க வீதி நகராட்சி பள்ளி மற்றும் கச்சேரி வீதி பள்ளியில், தலா, ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 200 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது. உடுமலை ஒன்றியத்தில், கோவிஷீல்டு, எலையமுத்துார் பள்ளியில், 500 பேருக்கும், மானுப்பட்டி, குறிச்சிக்கோட்டை, தலா 300, பெரியகோட்டை சிவசக்தி காலனி பள்ளியில், 360 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், 50 பேருக்கும், பெரியவாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில், 100 பேருக்கும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.குடிமங்கலம் ஒன்றியத்தில், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 300 பேருக்கு கோவிஷீல்டு, 20 பேருக்கு கோவாக்சின், பெதப்பம்பட்டி துவக்கப்பள்ளியில், 230 பேருக்கு, கோவிஷீல்டு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மடத்துக்குளம் ஒன்றியத்தில், பெருமாள் புதுார், குப்பம்பாளையம், கடத்துார், துங்காவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில், தலா, 200 பேருக்கும், கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 70 பேருக்கும், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இம்மையங்களில், கோவாக்சின் தடுப்பூசி, தலா, 20 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.அதே போல், உடுமலை, ஜல்லிபட்டி அரசு மருத்துவமனைகளில், தலா, 200 பேருக்கும், மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில், 50 பேருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X