பொது செய்தி

இந்தியா

தண்ணீர் பாட்டில் விற்பனை: மீண்டும் துவக்குகிறது பாசிக்

Added : அக் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பாசிக் நிறுவனம், மீண்டும் 'மினரல் வாட்டர்' விற்பனையை துவங்குவதற்கான பூர்வாங்க பணிகளை முடுக்கி விட்டுள்ளது.புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான 'பாசிக்' , கடந்த 1990ம் ஆண்டு 'மினரல் வாட்டர்' உற்பத்தியை துவக்கியது.இதனை 'பாண்டிச்சேரி மினரல் வாட்டர்' என்ற பெயரில், 300 மி.லி, 500 மி.லி, 1 லிட்டர், 1.5 லி, 2 லிட்டர் கொள்ளளவில் குடிநீரை பாட்டிலில் அடைத்து விற்பனை

புதுச்சேரி-பாசிக் நிறுவனம், மீண்டும் 'மினரல் வாட்டர்' விற்பனையை துவங்குவதற்கான பூர்வாங்க பணிகளை முடுக்கி விட்டுள்ளது.புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான 'பாசிக்' , கடந்த 1990ம் ஆண்டு 'மினரல் வாட்டர்' உற்பத்தியை துவக்கியது.இதனை 'பாண்டிச்சேரி மினரல் வாட்டர்' என்ற பெயரில், 300 மி.லி, 500 மி.லி, 1 லிட்டர், 1.5 லி, 2 லிட்டர் கொள்ளளவில் குடிநீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்தது.தனித்துவ சுவை கொண்ட இந்த குடிநீருக்கு புதுச்சேரி மட்டுமின்றி தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலும் அமோக வரவேற்பு இருந்தது. டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கும் பாசிக் மினரல் வாட்டர் சப்ளை செய்யப்பட்டது. பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.இயற்கை தன்மை மாறாமல் வினியோகிக்கப்பட்டதால், வி.ஐ.பி.,க்கள் அனைவரும் விரும்பி பருகும் வகையில் பாசிக் மினரல் வாட்டர் இருந்து வந்தது.நவீன தொழில்நுட்பமான ஆர்.ஓ., சிஸ்டம் வந்த பிறகு தனியார் நிறுவனங்களின் போட்டியால் பாண்டிச்சேரி மினரல் வாட்டருக்கான வரவேற்பு சரிந்தது கடந்த 2017ம் ஆண்டோடு இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.இந்நிலையில், பாசிக் நிறுவனம் மினரல் வாட்டர் விற்பனையை மீண்டும் துவக்க உள்ளது. இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை பாசிக் துவக்கி உள்ளது. உற்பத்திக்கான இயந்திரங்களை பரிசோதனை முயற்சியில் இயக்கி வருகிறது.கடந்த 2017ம் ஆண்டு 2 லிட்டர் தண்ணீர் பாட்டில்-30 ரூபாய், 1.5 லிட்டர் 25 ரூபாய், 1 லிட்டர்-20 ரூபாய், 500 மி.லி. --11 ரூபாய், 300 மி.லி.,-6 ரூபாய்க்கு பாசிக் விற்றது.தற்போது அதே விலையிலேயே மீண்டும் களத்தில் இறங்க பாசிக் திட்டமிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X